Inbox 2.0 Eps 11: உங்கள் கோரிக்கை நிறைவேறியது! | Cinema Vikatan
Seeman: ``திமுக-வினருக்கு எந்த ரெய்டும் வராது; காரணம் கப்பம்..!" - சீமான் காட்டம்
சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் 88 - வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு, திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரின் திருஉருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அவர்,
"வ.உ.சி கப்பலோட்டியும், செக்கிழுத்தும் நாட்டின் விடுதலைக்கு பாடுபட்டார். தமிழகத்தைச் சேர்ந்த விடுதலை போராட்ட வீரர்கள் மறக்கப்பட்டு, மறைக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களின் எந்த அடையாளமும் தமிழகத்தில் இல்லை. திராவிடம் என்பது தமிழர்களின் அடையாளங்களை மறக்கடிக்க உருவாக்கப்பட்டது தான். தமிழர்களின் அடையாளங்களை திராவிட அடையாளங்களாக மாற்றியுள்ளார்கள்.
வல்லபாய் பட்டேலை தூக்கிப் பிடித்தவர்கள் ஆர்.என்.ரவியின் கூட்டத்தினர். அதை ஆதரித்தவர்கள் திராவிட கூட்டத்தினர். ஆட்சியாளர் தன் ஆட்சி சிறப்பாக இருக்கிறது என கூறினால், அந்த ஆட்சி கொடுமையாக இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆய்வுக்குச் செல்லும் பொழுது மக்கள் வரவேற்கிறார்கள் என்றால் அவர்களாகவே வரவேற்க வந்தார்களா அல்லது வர வைக்கப்பட்டார்களா?.
த.வெ.க - அ.தி.மு.க கூட்டணி குறித்தெல்லாம் என்னிடம் கேட்க கூடாது. நாங்கள் வரும் 2026 - ம் வருட சட்டமன்ற தேர்தலில் தனித்து தான் போட்டியிடுவோம். கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம் என்கிற கொள்கையுடயவன் நான்.
மற்ற எல்லோருக்கும் ரெய்டு வருகிறார்கள். ஆளும்கட்சியான தி.மு.க-வினரிடம் எந்த ரெய்டும் ஏன் வரவில்லை?. அவர்களுக்கு வராது. அதற்கு காரணம், அவர்கள் கரைப்படியாது கரம் என்பதல்ல. கப்பம் சரியாக கட்டி கொண்டுள்ளார்கள் என்று அர்த்தம். பா.ஜ.க ஆளும் மாநில முதல்வர்களையோ, அமைச்சர்களையோ சந்திக்க நேரம் ஒதுக்காத மோடி, தமிழக முதலமைச்சரையும், விளையாட்டுத் துறை அமைச்சரையும் சந்திக்க நேரம் ஒதுக்குகிறார். காலையில் அப்பா சந்தித்தால், மாலையில் மகன் சந்திக்கிறார். தி.மு.க-வும், பா.ஜ.க-வும் கள்ள உறவில் அல்ல... நல்ல உறவில் நேரடி கூட்டணியில் தான் இருக்கிறார்கள்" என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...