செய்திகள் :

Sleep: பயணங்களில் தூக்கம், பகல் தூக்கம், குறட்டை... வர காரணம் என்ன?

post image

கார், ரயில், பேருந்து... இப்படி எந்த வாகனத்தில் டிராவல் செய்தாலும், கொஞ்ச நேரத்தில் நம்மை அறியாமலே தூங்க ஆரம்பித்து விடுவோம். சிலர் பகல் நேரங்களில் வேலை செய்துகொண்டிருக்கும்போதே தூங்கி வழிவார்கள். அவற்றுக்கான அறிவியல் காரணங்கள் பற்றி பகிர்ந்துகொள்கிறார் தூக்கவியல் மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணன்.

sleep while work

''எந்த வாகனத்தில் பயணம் செய்தாலும் தூக்கம் கண்களை சுழட்டத்தான் செய்யும். அதிலும் வண்டி செல்லும் பாதைகள் குண்டு, குழியில்லாமல் சீராக இருக்கின்றன என்றால், தடையில்லாத தூக்கத்துக்கு கேரண்டிதான். இதுவே ரயில் பயணங்கள் என்றால் இன்னும் சொகுசுதான். மேடு, பள்ள பிரச்னைகள் இல்லாமல் ரயில் செல்வதே நமக்கு தொட்டிலில் போட்டு ஆட்டி தூங்க வைப்பதுபோல இருக்கும். அதிலும் ஜன்னலோர இருக்கைக் கிடைத்துவிட்டால், அடுத்த ஐந்தாவது நிமிடமே தூங்க ஆரம்பித்து விடுவோம். இதனை ராகிங் மூவ்மென்ட் (rocking movement) என்று கூறுவர். பயணத்தின்போது அதிக உணவுகளை எடுத்துக் கொள்ளாமல், போதிய அளவிற்கு தூங்கிய பிறகு பயணத்தைத் தொடங்கினால் தூக்கத்தைத் தவிர்த்து, இனிமையான பயணத்தை மேற்கொள்ளலாம்.

நாம் அதிக கவனம் செலுத்த அவசியமில்லாத இடங்களில் தூக்கம் வரும். இதில் பயணமும் அடக்கம். அதே நேரம், நீங்கள் டூ வீலர் ஓட்டிக்கொண்டிருக்கும்போது தூக்கம் வந்தால்... எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடக்க வாய்ப்பிருக்கிறது இல்லையா? போதுமான நேரம் தூங்கவில்லையென்றால், அந்த நாள் முழுவதும் உடல் சோர்வாகவே இருக்கும். நாம் தூங்கும் நேரம் மற்றும் தூக்கத்தின் ஆழம் பொறுத்தே நமது உடல் மற்றும் மூளையின் செயல்பாடுகள் இருக்கும். அதனால், நீங்கள்தான் வண்டி ஓட்டுபவர் என்றால், இரவுகளில் சரியாக தூங்கி உங்கள் தூக்க ஒழுக்கத்தை சரியாக பராமரிக்க வேண்டும்.

பணியிடத்தில் தூக்கம்

ஒரு சில நபர்களுக்கு அவர்கள் வேலை செய்கின்றபோது தூக்கம் வரும். ஒரே மாதிரியான செயல்கள் அல்லது ஒரே மாதிரியான விஷயங்களை திரும்ப திரும்ப செய்யும்போது உடல் சோர்வாகும். இதனால், தூக்கம் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

பொதுவாக குறட்டை விடும் பழக்கம் உள்ளவர்களுக்கு, உடலுக்குத் தேவையான அளவிற்கு மூச்சுக்காற்று கிடைக்காது. இதனால், ரத்தத்தின் ஆக்சிஜன் அளவு குறைந்து விடும். விளைவு, மறுநாள் அவர்கள் தூங்கி எழும்போது, உடல் மிகவும் அசதியாகவும் சோர்வாகவும் இருக்கும். இதனை ஸ்லீப் ஏப்னியா (sleep apnea) என்று கூறுவர். இதனுடைய அர்த்தம் தூங்கும்போது மூச்சுவிட சிரமப்படுவது. இவர்களுக்கு உடல் சோர்வு, மதிய நேரங்களில் தூக்கம், ஞாபகம் மறதி, அதிக கோபம் வருவது, தூங்கி எழுந்த பிறகு மீண்டும் தூங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றும். இதற்கான அறிகுறிகள் உள்ளவர்கள் விரைந்து சிகிச்சை எடுக்கவில்லை என்றால், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், பக்கவாதம் போன்ற உடல் சார்ந்த நோய்களும் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. குளிர்காலம், மழைக்காலம் போன்ற காலநிலை மாற்றத்தாலும் தூக்கம் சார்ந்த பிரச்னைகள் வரும், இதனை சீசனல் அஃபெக்டிவ் டிஸ்ஆர்டர் (seasonal affective disorder) என்று கூறுவர்.

தூக்கவியல் மருத்துவர் டாக்டர் ராமகிருஷ்ணன்

நமக்கு பொதுவாக இரவு மற்றும் மதிய நேரங்களில் அதிக உறக்கம் வரும். ஏனெனில், உணவு சாப்பிட்ட பிறகு உடல் நிறைய என்சைம்களை உற்பத்தி செய்து, உணவு செரிமானம் செய்ய உதவுகிறது. இதனால், உடல் சற்று சோர்வடைந்து ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுகிறது.

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/TATAStoryepi01

சந்திரபாபு நாயுடு வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட்; பின்னணி என்ன?

நாடாளுமன்றத் தேர்தலோடு நடத்தப்பட்ட ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 6 மாதங்களில், முன்பு சந்திரபாபு நாயுடு தொடர்பான வழக்கை விசாரித்த ஐ.பி.எஸ் அதிகாரி சஸ்பெண்ட... மேலும் பார்க்க

South Korea: `நேற்று ராணுவ ஆட்சி அமல்... இன்று வாபஸ்' - என்ன நடக்கிறது தென் கொரியாவில்?!

'இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர், ரஷ்ய - உக்ரைன் போர், அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றி... என ஏற்கெனவே பரபரப்பாக இருக்கும் உலக அரசியல் களத்தை இன்னும் பரப்பாக்கியது, தென் கொரியாவின் 'ராணுவ ஆட்சி அமல்' அறிவிப்ப... மேலும் பார்க்க

UP: ``என் கடமையை தடுக்கின்றனர்'' - தடுத்து நிறுத்தப்பட்ட ராகுல் காந்தி என்ன சொல்கிறார்?

ஹாஜி ஜாமா பள்ளிவாசல் வழக்கைத் தொடர்ந்து உத்தரபிரதேசம் மாநிலம் சம்பால் பகுதியில் வன்முறை எழுந்தது. காவல்துறையினர் மற்றும் பள்ளிவாசலில் தொல்லியல் ஆய்வு மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த குழுக்கள் இடையி... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா முதல்வராகும் தேவேந்திர பட்னாவிஸ்... முடிவுக்கு வந்த இழுபறி..!

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு முதல்முறையாக பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று காலையில் மந்த்ராலயாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மேலிட பார்வையாளர்களாக மத்திய அமைச்சர் நிர்மலா சீ... மேலும் பார்க்க

பஞ்சாப்: மத தண்டனைக்குள்ளான முன்னாள் துணை முதல்வர்; துப்பாக்கிச் சூட்டில் உயிர் தப்பியது எப்படி?

பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய கட்சிகளில் ஒன்று சிரோமணி அகாலி தளம். இந்தக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் சுக்பீர் சிங் பாதல். 2007 - 2017-வரை சிரோமணி அகாலி தளம் கட்சி, பஞ்சாபில் ஆட்சியில் இருந்தது. ... மேலும் பார்க்க

Railway union election: `என் நிர்வாகிகள் தவறாக நடந்திருந்தால் மறந்துடுங்க!' - SRMU கண்ணையா

ரயில்வேயில் தொழிற்சங்கங்கங்களை அங்கீகரிப்பதற்கான தேர்தல் நாடு முழுக்க இன்றும் நாளையும் நடக்கிறது.ஆறு வருடத்துக்கொரு முறை நடக்க வேண்டிய இந்தத் தேர்தல் 2019-லேயே நடந்திருக்க வேண்டியது. ரயில்வே நிர்வாகம்... மேலும் பார்க்க