செய்திகள் :

Srilanka: நாடாளுமன்றத் தேர்தலிலும் `ஜாக்பாட்' அடிப்பாரா அநுர குமார திசாநாயக்க... களநிலவரம் என்ன?!

post image
அதிபர் தேர்தல் முடிந்த கையோடு நாடாளுமன்றத் தேர்தலுக்கும் தயாரானது இலங்கை. புதிய அதிபரான அநுர குமார திசாநயக்க, பதவியேற்ற அடுத்த நாளே நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டு, `நவம்பர் 14-ல் பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும்' என அறிவித்தார்.

இலங்கை அதிபர் தேர்தலில், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவராகக் களமிறங்கிய அநுர குமார திசாநாயக்க அமோக வெற்றிபெற்றார். சட்டங்களை நிறைவேற்றும் அதிகாரம் கொண்ட அதிபராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், நாடாளுமன்றத்தில் அவருக்கு ஆதரவாக இருந்தது மூன்று எம்.பி-க்கள் மட்டுமே. நாடாளுமன்றத்தில் பலமில்லை என்றால், பல்வேறு விவகாரங்களை நிறைவேற்றுவது கடினம் என்பதை உணர்ந்த அநுர குமார, உடனடியாக பிரதமர் தேர்தலை அறிவித்தார்.

கோத்தபய ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாசா

அதிபர் தேர்தலில் தன் பக்கம் வீசிய அலை ஓய்வதற்குள்ளாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவிட வேண்டும் என்பதுதான் அநுரவின் திட்டம். அதன்படி, நவம்பர் 14-ம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில், பல கட்சிகளும் களமிறங்கி, அதிரடிப் பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, 21 கட்சிகள், அமைப்புகளுடன் கூட்டணி அமைத்து, அநுர தலைமையிலான தேசிய மக்கள் சக்தி களமிறங்கியிருக்கிறது.

அதுபோக, ராஜபக்சேக்களின் இலங்கை பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, புதிய ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகள் பிரதானமாகக் களமாடி வருகின்றன. மேலும், இலங்கை தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, தமிழ் தேசிய முன்னணி, ஐக்கிய ஜனநாயகக் குரல் உள்ளிட்ட சிறிய கட்சிகளும் களத்தில் இருக்கின்றன.

அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற உற்சாகத்துடன், பிரதமர் தேர்தலில் களமிறங்கியிருக்கிறது தேசிய மக்கள் சக்தி கூட்டணி. சில பல முக்கியக் கட்சிகள் களமிறங்கியிருந்தாலும், ராஜபக்சே குடும்பத்தினரோ, ரணில் விக்மரசிங்கவோ பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கவில்லை. இதனால், எளிதாகப் பல மாகாணங்களிலும் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறது தேசிய மக்கள் சக்தி. ஆனால், பிரதான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக, அதிபர் தேர்தலில் இரண்டாமிடம் பிடித்த சஜித் பிரேமதாசாவே பிரதமர் வேட்பாளராகக் களமிறங்கியிருக்கிறார். `இது, அநுர அணிக்குப் பின்னடைவாக அமையும்' என்கிறார்கள் இலங்கை அரசியல் நோக்கர்கள்.

Sajith Premadasa

மேலும், ``கடந்த தேர்தலில் மூன்று இடங்களில் மட்டுமே அநுரவின் கட்சி வென்றிருந்தாலும், அதிபரான பிறகு கட்சியையும், கூட்டணியையும் வலுப்படுத்தியிருக்கிறார் அநுர. அதேபோல, மக்கள் ஆதரவும் அவரது கட்சிக்குப் பெருகியிருக்கிறது. இருந்தும், சஜித் கட்சியின் வலுவான கட்டமைப்பும், அவர் அமைத்திருக்கும் கூட்டணியும் அநுர அணிக்குச் சிக்கல்தான். அதோடு, பல்வேறு கட்சிகளும் களத்தில் நிற்பதால் வாக்குகள் பலவாறாகச் சிதறுவதும், அநுர அணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும்'' என்கிறார்கள்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 எம்.பிக்கள். இதில், 196 பேர் மக்களால் நேரடியாகவும், 29 பேர் தேசியப் பட்டியல் மூலமாகவும் தேர்வு செய்யப்படுகிறார்கள். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவைப்படுகின்றன. ஒருவேளை, அநுர அணிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்காவிட்டால், வேறு சில கட்சிகளுடன் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை அமைக்க முயல்வார்கள். அதுவும் கைகூடவில்லை என்றால், எதிரணியைச் சேர்ந்தவரே பிரதமராக அமர்த்தப்படுவார். அப்படி நடந்தால், அதிபருக்குப் பல சிக்கல்கள் உண்டாகும் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

அநுர குமார

இலங்கை அரசியலை உற்றுநோக்கும் சிலர், ``பெரும்பாலும் அதிபராக இருப்பவரின் கட்சியைச் சேர்ந்தவரே பிரதமராக வருவார்கள். ஒருவேளை அப்படி நடக்காத பட்சத்தில், அதிபர் தான் நினைக்கும் விஷயங்களை நிறைவேற்றிக்கொள்ள முடியாத சூழல் உருவாகும். நிதி, பாதுகாப்பு ஆகிய அமைச்சகங்கள் மட்டுமே அதிபரின் கீழ் நேரடியாக இயங்கும். மற்ற அமைச்சகங்கள் நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும். எனவே, மற்ற விவகாரங்களில் அதிபர் நினைக்கும் விஷயங்களைச் சாத்தியப்படுத்துவது சாத்தியமில்லாமல் போகும்'' என்கிறார்கள்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறவிருக்கிறது. `அடுத்த பிரதமர் யார்?' என்ற கேள்விக்கான விடை நவம்பர் 15-ம் தேதி தெரிந்துவிடும் எனச் சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...

https://bit.ly/UlagaiMaatriyaThalaivargal

நெல்லை: சேரும் சகதியுமான சாலைகள்; நடந்து செல்வதே சாகசம்தான்... அவதியில் ராதாபுரம் மக்கள்..!

நெல்லை மாவட்டம், ராதாபுரம் தாலுகாவுக்கு உள்பட்ட ப்ரைட் நகர் பகுதியில் சுமார் 120 வீடுகள் வரை இருக்கின்றன. இந்தக் குடியிருப்பு பகுதியில் உள்ள பாதைகள் அனைத்தும், முறையாகச் சாலைகள் அமைத்துத் தரப்படாமல், ... மேலும் பார்க்க

குமரி: திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் இடையே கட்டப்பட்டு வரும் கண்ணாடிப் பாலம்! | Album

திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம்திருவள்ளுவர் சிலை - விவேகானந்தர் மண்டபம் மேலும் பார்க்க

``பணத்தை கேட்டால் பிணம்தான்... மிரட்டும் அமைச்சரின் உதவியாளர்'' - எஸ்.பி-யிடம் புகார் அளித்த பெண்

மயிலாடுதுறை சின்ன கண்ணாரத் தெருவைச் சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தி.மு.க-வின் ராணிப்பேட்டை மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளரான வேதா ஸ்ரீநிவாஸ் என்பவர்மீது ராணிப்பேட்டை எஸ்.பி-யிடம் புகார் மனு ஒன்றைக் க... மேலும் பார்க்க

“அரசு மருத்துவமனைகளில் டேக் கட்டும் நடைமுறை செயல்பாட்டுக்கு வரும்! ” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையின் புற்றுநோய் துறையின் தலைமை மருத்துவராகப் பணியாற்றி வந்த மருத்துவர் பாலாஜியை, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்பட... மேலும் பார்க்க

கிண்டி: "நலமுடன் இருக்கிறேன்; முதல்வரிடம் நான் வைக்கும் கோரிக்கை இதுதான்..." - மருத்துவர் பாலாஜி

கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் பாலாஜியை, விக்னேஸ்வரன் என்பவர் நேற்று (நவம்பர் 13) காலை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இ... மேலும் பார்க்க

தவறான பிரமாணப் பத்திரம்... அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது தேர்தல் குற்ற வழக்கு!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி திட்டமிட்டு தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல... மேலும் பார்க்க