செய்திகள் :

Trump Tower: எண்ணிலடங்கா ஆடம்பரங்கள்; சர்ச்சை - இந்தியாவில் விரிவடையும் ட்ரம்ப் நிறுவன கரங்கள்!

post image

மும்பையில் நாளுக்கு விண்ணை முட்டும் அடுக்கு மாடிக்கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னிலையில் இருக்கும் டொனால்டு ட்ரம்ப் மகன் டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப்பறக்கிறவர். அவர் உலகம் முழுவதும் பிரபல கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து கட்டுமானப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

அவர் பொதுவாக அமெரிக்காவுக்கு வெளியில் நேரடியாக எந்தவித கட்டுமானத்திலும் ஈடுபடுவது கிடையாது. ஆனால் தனது கம்பெனி பெயர் மற்றும் ட்ரம்ப் பெயரை பயன்படுத்திக்கொள்ள வேறு கம்பெனிகளுக்கு அனுமதி கொடுத்து அதன் மூலம் கட்டப்படும் வீட்டை விற்பனை செய்வதில் கிடைக்கும் தொகையில் 3 முதல் 4 சதவீதத்தை பெற்றுக்கொள்வது வழக்கம். அப்படியான அவரின் திட்டத்தில், அவர் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. முதன் முதலில் ஜூனியர் ட்ரம்ப் மும்பையில் தான் தான் தனது கட்டுமானப்பணியை தொடங்கினார்.

ஜூனியர் டிரம்புடன் லோதா

மும்பை மட்டுமல்லாது புனேயிலும் ட்ரம்ப் டவர் கட்டப்பட்டது. இதற்காக மும்பையில் பிரபலமான விளங்கும் லோதா நிறுவனத்துடன் இணைந்து டொனால்டு ட்ரம்ப் ஜூனியர் 2014-ம் ஆண்டு மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் கட்டும் திட்டத்தை தொடங்கினார். ட்ரம்ப் டவர் என்ற பெயரில் 79 மாடியில் அக்கட்டடம் கட்டப்பட்டது. இக்கட்டிடம் 2018-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் தொழிலதிபர்கள் வீடுகளை வாங்கி இருக்கின்றனர். 3, 4, 5 படுக்கை வசதி கொண்ட வீடுகள் இதில் இருக்கிறது. இங்குள்ள வீட்டின் அதிக பட்ச விலை இப்போது ரூ.25 கோடியாகும். இதில் வீடுகளை வாங்கி பாலிவுட் பிரபலங்கள் வாடகைக்கு கொடுத்திருக்கின்றனர். இக்கட்டடத்தில் வீடு வாங்குபவர்களுக்கு 10 மணி நேரம் விமானத்தில் பறக்க சலுகை வழங்கப்படும் என்று அறிவித்து வீடுகளை விற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சொன்னபடி விமானத்தில் செல்ல சலுகை வழங்கப்படவில்லை என்று அதில் வீடு வாங்கியவர்கள் ஒரு புறம் குற்றம் சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இலவசமாக 10 மணி நேரம் பயணம் செய்ய லேண்டிங் மற்றும் வெயிட்டிங் கட்டணம் செலுத்தவேண்டும் என்று பில்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் ஒப்பந்தம் செய்த போது அது போன்ற எந்த ஒரு விதியும் சேர்க்கப்படவில்லை என்றும், மார்க்கெட் விலையை விட அதிக கட்டணம் கொடுத்து வீட்டை விற்பனை செய்தனர் என்று வீடு வாங்கியவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ட்ரம்ப் டவரின் எண்ணிலடங்கா ஆடம்பர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 7 நீச்சல் குளம் மட்டும் இதில் இருக்கிறது. அதோடு நவீன உடற்பயிற்சி சாதனங்களுடன் ஜிம், பிட்னஸ் சென்டர், சர்வதேச தரத்தில் ஸ்பா, கிரிக்கெட் மைதானம், மரவீடுகள், உள்விளையாட்டு அரங்கம் போன்ற ஆடம்பர வசதிகளுடன் 17 ஏக்கரில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டட டிசைனை இத்தாலியை சேர்ந்த பிரபல கட்டட டிசைனர் வரைந்து கொடுத்துள்ளார். இக்கட்டடம் காண்போரை கவரும் விதத்தில் கட்டப்பட்டுள்ளது. புனேயிலும் இதே போன்று ட்ரம்ப் டவர் கட்டப்பட்டுள்ளது. ட்ரம்ப் பெயரை பயன்படுத்தி குடியிருப்பு கட்டடங்கள் கட்டும் பிரத்யேக இந்திய உரிமையை டிரிபேகா டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் டொனால்டு ட்ரம்ப் ஜூனியரிடமிருந்து பெற்று இருக்கிறது.

டிரிபேகா நிறுவனத்தின் உரிமையாளர் கல்பேஷ் மேத்தாவுக்கு டொனால்டு ட்ரம்ப் ஜூனியருடன் நெருக்கமாகும். அதனால்தான் ட்ரம்ப் ஜூனியர் பிரத்யேக உரிமையை கல்பேஷ் மேத்தாவிற்கு கொடுத்துள்ளார். கல்பேஷ் மேத்தா இந்தியாவில் உள்ள பிரபல கட்டுமான நிறுவனங்களுடன் இணைந்து ட்ரம்ப் பெயரில் கட்டடங்கள் கட்டும் பணியை மேற்கொண்டுள்ளார். குருகிராம். கொல்கத்தாவிலும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து ட்ரம்ப் டவர் கட்டும் பணியில் டிரிபேகா நிறுவனம் ஈடுபட்டுள்ளது. மும்பையில் இரண்டாவது ட்ரம்ப் டவரை பரேல் பகுதியில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. அதோடு ஐதராபாத்திலும் இதனை விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

Adani: "இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற லஞ்சம்" - அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் புகார்

தொழிலதிபர் கெளதம் அதானி மீது அடிக்கடி புகார்கள் வந்தாலும் அவை ஓரிரு நாளில் காணாமல் போய்விடுவது வழக்கமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி அதானி மீது புகார்கள் கூறினாலும் அவை எடு... மேலும் பார்க்க

எலான் எனும் எந்திரன் 3: 1999-லேயே Elon Musk-க்கின் கனவுக்கு உயிர் கொடுத்த `X.com’

1990களின் மத்தியிலேயே இமெயில் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாகிவிட்டது என்றாலும், அத்தனை பிரபலமாகவில்லை. கனடா நாட்டைச் சேர்ந்த இன்டராக் (Interac) என்கிற நிறுவனம் மெயில் மூலம் பணப்ப... மேலும் பார்க்க

திருமண ஊர்வலத்தில் பொழிந்த `பண' மழை... ரூ.20 லட்சத்தை முண்டியடித்துக் கொண்டு அள்ளிச் சென்ற மக்கள்!

ஒவ்வொருவரும் விதவிதமாக திருமணத்தை நடத்துவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதோடு அனைவராலும் பேசப்படும் ஒரு திருமணமாகவும் மாறி இருக்கிறது. அந்த... மேலும் பார்க்க

ரூ.15 கோடி பட்டுவாடா? - வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.5 கோடி கொண்டுவந்தாரா பாஜக தலைவர்?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர பிரசாரம் செய்ததோடு அனைத்து பத்திரிகைகளிலும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக... மேலும் பார்க்க

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் குறிப்பிட்ட `சமரச மையம்’ என்றால் என்ன?

நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்ததே. முதலில் ஜெயம் ரவி தாங்கள் பிரிந்து வாழ்வதாக அறிவிக்க, 'அது என்னுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவல்ல. என்னால் அவரைத் தொடர்ப... மேலும் பார்க்க

சென்னையில் கூடைப்பந்து வீராங்கனை திடீர் மரணம்; சிக்கன் ரைஸ்தான் காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கோவையைச் சேர்ந்த எலினா லாரெட் என்ற 15 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து ப... மேலும் பார்க்க