செய்திகள் :

Vidharth: ``நம் சமூகத்தில் இயல்பாக ஒரு ஸ்கேம் நடந்துகொண்டிருக்கிறது!" - ̀மருதம்' குறித்து விதார்த்

post image

எளிமையான தோற்றத்திலும் உணர்ச்சி நிறைந்த நடிப்பாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகர் விதார்த், தனது புதிய திரைப்படமான `மருதம்' பற்றி விகடனுக்கு அளித்த சமீபத்திய நேர்காணலில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

மருதம் படத்தில்

அறிமுக இயக்குநர் காஜேந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படம், ஒரு விவசாயி தன் தாத்தாவின் காலத்திலிருந்து பெற்ற நிலத்தைக் காப்பாற்ற நடத்தும் போராட்டத்தை மையமாகக் கொண்டுள்ளது. இப்படம் அக்டோபர் 10 அன்று வெளியாகவுள்ளது.

சமூகத்தில் இயல்பாக நடந்துகொண்டிருக்கும் ஒரு மோசடி (Scam) பற்றி விதார்த் இந்தப் பேட்டியில் குறிப்பிட்டார். அவர் கூறியதாவது, "நம் சமூகத்தில் இயல்பாக ஒரு ஸ்கேம் நடந்துகொண்டு வருகிறது.

நடுத்தர வர்க்கம் மற்றும் அதற்குக் கீழ் இருப்பவர்களை, குறிப்பாக விவசாயிகளைப் பலிகடாவாக ஆக்கும் இந்த மோசடியை, மிக எளிதாகச் சாதாரண விஷயமாகச் சொல்லி கடந்து செல்வது எனக்குப் பெரிய அதிர்ச்சியாக இருந்தது.

ஒரு விழிப்புணர்வாக இல்லையென்றாலும், ஒரு எச்சரிக்கையாவது இந்தப் படம் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்தக் கதையைத் தேர்வு செய்தேன்.

மருதம் படத்தில்
மருதம் படத்தில்

இந்தக் கதை இயல்பாக அமைய வேண்டும் என்பதற்காகப் படப்பிடிப்பு நடந்த கிராமத்துக்கே சென்று, அங்கேயே இருந்தவர்களின் வாழ்க்கைமுறையைக் கவனித்து, அவர்களின் உடை, உடல்மொழி ஆகியவற்றைக் கவனித்து அதைத் திரைப்படத்தில் காட்டியிருக்கிறோம்." என்றவர், " 'மஸ்குலர் டிஸ்ட்ராஃபி'யால் பாதிக்கப்பட்ட என்னுடைய ரசிகர் ஒருவரைச் சந்தித்தேன்.

அவருக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததால் அவரையும் இந்தப் படத்தில் நடிக்க வைத்திருக்கிறோம். அந்த ரசிகருடன் சேர்ந்து படத்தைப் பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் இப்போது நம்முடன் இல்லை. அந்த செய்தி என்னை வருத்தமடையச் செய்தது." என்ற வருத்தத்தையும் தெரிவித்தார்.

Kantara: `நான் நடிச்சிருக்கேன்னு நிறைய பேருக்கு தெரியாது' - `காந்தாரா' அனுபவம் பகிரும் சம்பத் ராம்

ஒட்டுமொத்த இந்திய சினிமாவின் கவனத்தையும் சாண்டில்வுட்டின் பக்கம் திருப்பியிருக்கிறது காந்தாரா சாப்டர் 1'. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. விஷுவலாக ... மேலும் பார்க்க

Bison:``மாரி செல்வராஜ் நான்தான் பாடலை பாடணும்னு முடிவாக சொல்லிட்டாரு!" - `பைசன்' பற்றி பாடகர் சத்யன்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் பைசன்' திரைப்படம் இந்தாண்டு தீபாவளி ரிலீஸாக திரைக்கு வரவிருக்கிறது. நிவாஸ் கே பிரசன்னா இசையில் உருவாகியிருக்கும் பைசன்' படத்தின் துடிப்பான பாடல்கள் அடுத்தட... மேலும் பார்க்க

``ராஜ்கிரண் சாருக்கு அட்வான்ஸ் கொடுத்தப்போ கை நடுங்குச்சு!" - பிளாஷ்பேக் சொல்லும் கஸ்தூரி ராஜா!

மில்லேனியல்ஸ்க்கு 'என் ராசாவின் மனசிலே', 90ஸ் கிட்ஸ்க்கு 'துள்ளுவதோ இளமை' போன்ற படங்களுக்காக பெயர் பெற்றவர் கஸ்தூரி ராஜா. கிராமத்துக் காவியங்களாக இருக்கும் பெரும்பாலான இவரின் படங்கள், அவ்வகைக்கே ஓர் ப... மேலும் பார்க்க

̀" 'கடைசி விவசாயி' பட கடைசி சீனில் தாத்தா கண் முழிக்கவில்லை என்றால்..." - ஷ்ரத்தா ஶ்ரீநாத் பேட்டி

``காவ்யா வெறும் ஒரு கேம் டெவலப்பர் கதாபாத்திரம் கிடையாது. அவள் ரொம்ப கோபப்படும் ஒரு பெண், அதுவும் அவங்க அம்மா கூட அதிகமா கோபப்படுவாள். ஒரு நடிகையா நான் அந்த கதாபாத்திரத்தை அனுதாபப்பட்டு பார்க்கணும். ந... மேலும் பார்க்க

`` நான் டைரக்‌ஷன் பக்கம் வரவேண்டும் என பாலா சார்..." - இயக்குநராக அறிமுகமாவது குறித்து வரலட்சுமி

கூடிய விரைவில் இயக்குநராகக் களமிறங்குகிறார் நடிகை வரலட்சுமி. அவர் இயக்கும் திரைப்படத்திற்கு `சரஸ்வதி' எனப் பெயரிட்டிருக்கிறார். இயக்குவதோடு படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். பி... மேலும் பார்க்க