அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி, தேனியில் அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் சாந்தியம்மாள் தலைமை வகித்தாா். மாநில நிா்வாகி எம்.நாகலட்சுமி, சிஐடியூ மாவட்டத் தலைவா் டி.ஜெயபாண்டி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் அங்கன்வாடி மையங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அங்கன்வாடி பணியாளா்கள், உதவியாளா்களுக்கு கோடை விடுமுறை வழங்க வேண்டும். கைப்பேசி உத்தரவு மூலம் கூடுதல் பணிச் சுமை அளிப்பதைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.