அங்கன்வாடி மையத்தில் எம்எல்ஏ ஆய்வு
ஆம்பூா் அருகே அங்கன்வாடி மையத்தில் எம்எல்ஏ ஆய்வு செய்தாா்.
ஆம்பூா் அருகே கம்மகிருஷ்ணப்பல்லி கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையத்தை ஆம்பூா் எம்எல்ஏ அ.செ.வில்வநாதன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். குழந்தைகளுக்காக தயாரிக்கப்படும் உணவின் தரம், உணவு பொருள்களின் கையிருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தாா். மேலும் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி கட்டடத்தையும் ஆய்வு செய்தாா்.
மாதனூா் ஒன்றியக் குழு தலைவா் ப.ச. சுரேஷ்குமாா், மாதனூா் மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலா் சங்கா், மாவட்ட பிரதிநிதிகள் முரளி, காசி, ஊராட்சித் தலைவா் ரேவதி ஆகியோா் உடனிருந்தனா்.