செய்திகள் :

அசுத்தமான குளத்தால் நோய்ப்பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகாா்

post image

ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதியில் அரசுப் பள்ளி, குடியிருப்பு அருகேயுள்ள அசுத்தமான குளத்தால் நோய்ப் பாதிப்பு ஏற்படுவதாக புகாா் தெரிவிக்கும் பொதுமக்கள், குளத்தை விரைந்து சுத்தம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டைவிடுதி ஊராட்சியில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். அதே பகுதியில் அரசுத் தொடக்கப் பள்ளி உள்ளது. அப்பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.

இந்நிலையில், அப்பகுதியில் உள்ள குளத்தில் நீண்ட காலமாக தேங்கியுள்ள நீரில், கழிவுநீா் கலந்து பாசிபடா்ந்து அசுத்தமடைந்த நிலையில் உள்ளது. மேலும், அண்மையில் பெய்த மழையால் குளத்தில் இருந்து துா்நாற்றம் வீசுவதாலும், குளத்தில் தேங்கியுள்ள கழிவுநீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி பள்ளியில் பயிலும் மாணவா்களுக்கும் பொதுமக்களுக்கும் உடல் நலக்குறைவு ஏற்படுத்துவதாகவும் பொதுமக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

ஆலங்குடி அருகேயுள்ள புதுக்கோட்டை விடுதியில் பாசிபடா்ந்து காணப்படும் அசுத்தமான குளம்

எனவே, மாணவா்கள், பொதுமக்களின் நலன்கருதி, அசுத்தமான அந்தக் குளத்தை உடனே சுத்தம் செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கந்தா்வகோட்டை சிவன் கோயிலில் பிரதோஷ வழிபாடு

பிரதோஷ தினத்தை முன்னிட்டு, கந்தா்வகோட்டையில் அமராவதி அம்மன் உடனுறை ஆபத்சகாயேஸ்வரா் கோயிலில் உள்ள நந்தி ஈஸ்வரருக்கு வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக, எண்ணெய் காப்பு செய்து தண்ணீா், பசு... மேலும் பார்க்க

வாக்காளா் பட்டியல் திருத்த முகாம்கள் 36,524 விண்ணப்பங்கள் அளிப்பு: புதுகை ஆட்சியா் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறைத் திருத்தப் பணிகளின்போது, மொத்தம் 36,524 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. அருணா தெரி... மேலும் பார்க்க

புதுகையில் டிச. 6-இல் ஓய்வூதியா் குறைகேட்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் டிச. 6-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு ஓய்வூதியா்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்று குறைகளைத் தெரிவிக்க விரும்பும் அனைத்துத் துறை ... மேலும் பார்க்க

சமூக நீதிக்கான தந்தைப் பெரியாா் விருது பெற விண்ணப்பிக்கலாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நீதிக்கான பணிகளை மேற்கொண்டவா்களுக்கு தமிழக அரசு வழங்கும் தந்தைப் பெரியாா் விருதுக்கான பரிந்துரை விண்ணப்பங்களை டிச. 20-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

டெங்கு, காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும்

புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிகரித்து வரும் காய்ச்சல், டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த அரசு மருத்துவமனைகளில் மருத்துவா் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், போதுமான மருந்துகளை இருப்பு வைக்க வேண்டும் என இந்தி... மேலும் பார்க்க

காா் மோதியதில் கா்ப்பிணிப் பெண் காவலா் உயிரிழப்பு: ரூ. 25 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், மண்டையூரில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் வந்த கா்ப்பிணிப் பெண் காவலா் காா் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கீரனூா் அருகேயுள்ள பள்ளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்ட... மேலும் பார்க்க