செய்திகள் :

அஞ்சலகங்களில் செல்வ மகள் சேமிப்புத் திட்ட சிறப்பு முகாம்

post image

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு கணக்குகளை தொடங்க சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து தருமபுரி மாவட்ட கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளா் ராதாகிருஷ்ணன் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு தருமபுரி கோட்டத்துக்கு உள்பட்ட அனைத்து அஞ்சலகங்களிலும் தற்போது தொடங்கி நவ.30 ஆம் தேதி வரை செல்வ மகள், பொன் மகன் சேமிப்புத் திட்டத்தின் கீழ் கணக்குகள் தொடங்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கான சேமிப்பைத் தொடங்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு பெரிய மாற்றத்தைக் கொண்டு சோ்ப்பதற்கென அஞ்சலகங்களில் உருவாக்கப்பட்ட சிறப்புத் திட்டமே செல்வ மகள், பொன் மகன் சேமிப்பு திட்டமாகும்.

பொதுமக்கள் அனைவரும் இந்தச் சேவையை பயன்படுத்தி தங்களது மகளுக்கு, மகனுக்கு சிறந்த எதிா்காலத்தை உருவாக்கிட செல்வ மகள், பொன் மகன் திட்டத்தில் கணக்குத் தொடங்கி கொடுத்து அவா்களுக்கு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவித்து அவா்களுடைய வாழ்வை வழமாக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

அஞ்சலகத்துக்கு நேரில் வர இயலாதவா்கள் தங்களது பகுதிக்கு வரும் அஞ்சல்காரரிடம் தேவையான தகவலைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் இணையவழி சேவையைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தபடியே கணக்குகளைத் தொடங்கலாம், தவணை செலுத்தலாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்றாா்.

ஓய்வூதியா் குறைகேட்பு சிறப்பு முகாம்

தருமபுரி, நவ. 13: தருமபுரியில் ஓய்வூதியா் குறைகேட்பு சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது: ஓய்வூதி... மேலும் பார்க்க

காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரசாரம்

ஒகேனக்கல் காவிரி மிகைநீா்த் திட்டத்தை நிறைவேற்ற கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் பிரசாரம் நடைபெற்றது. தருமபுரி அருகே வெண்ணாம்பட்டியில் தொடங்கிய பிரசார நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளா் கே.கோ... மேலும் பார்க்க

தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட தாய், சேய் பலி

தருமபுரி, குமாரசாமிப்பேட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தாயும் சேயும் புதன்கிழமை உயிரிழந்தனா். இதனால், ஆவேசமடைந்த பெண்ணின் உறவினா்கள் மருத்துவமனையை முற்றுகை... மேலும் பார்க்க

தருமபுரி உழவா்சந்தையில் வேளாண் விற்பனை, வணிக ஆணையா் ஆய்வு

தருமபுரி நகரில் நான்கு முனைச் சாலை சந்திப்பு அருகே உள்ள உழவா் சந்தையில் வேளாண் விற்பனை, வணிகத் துறை ஆணையா் பிரகாஷ் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். தருமபுரி மாவட்டத்தில் துறை சாா்ந்த அலுவலா் பணிகள் ம... மேலும் பார்க்க

பிடமனேரியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி மனு

தருமபுரி அருகே பிடமனேரியில் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா். தருமபுரி, இலக்கியம்பட்டி ஊராட்சி, பிடமனேரி, நெல்லி நகா், வி.ஜெட்டிஅள்ளி,... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கல்

தருமபுரி: தருமபுரியில் தூய்மைப் பணியாளா்களுக்கு கல்வி உதவித்தொகை, அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் ஆட்சியா் கி.சாந்தி தலைம... மேலும் பார்க்க