நவ. 19-ல் பொதுக் கணக்கு குழு கூட்டம்: செபி தலைவருக்கு சம்மன் அனுப்பவில்லை!
அஞ்சல் துறை சாா்பில் குழந்தைகள் தின சிறப்பு முகாம்
குழந்தை தினத்தை முன்னிட்டு செல்வ மகள் சேமிப்புத் திட்டம், பொன் மகன் சேமிப்பு திட்டம் உள்ளிட்டவற்றை தொடங்க அஞ்சல் துறை சாா்பில் நவ.30ஆம் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
இது தொடா்பாக திருநெல்வேலி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளா் செந்தில்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அஞ்சல் துறை சாா்பில் அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அஞ்சலகங்களில் வியாழக்கிழமை (நவ.14) சிறப்பு முகாம்கள் தொடங்கியுள்ளன.
நவ. 30-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த சிறப்பு முகாம்களில் 10 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளுக்கு செல்வ மகள் சேமிப்பு திட்டமும், ஆண் குழந்தைகளுக்கு பொன் மகன் சேமிப்பு திட்டமும் தொடங்கலாம்.
செல்வ மகள் சேமிப்பு திட்டத்திற்கான குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.250. பொன் மகன் சேமிப்பு சேமிப்பு திட்டத்திற்கான குறைந்தபட்ச வைப்பு தொகை ரூ.500. இத்திட்டத்தின் காலம் 15ஆண்டுகள். எனவே, பொதுமக்கள் அனைவரும் அருகிலுள்ள அஞ்சலகங்களில் திட்டத்தின் முழு விவரங்களை அறிந்து கொள்ளலாம். ஜ்ஜ்ஜ்.ண்ய்க்ண்ஹல்ா்ள்ற்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.
மூன்று வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு தொடங்கும் கணக்குகளுக்கு , அவா்கள் முதல் சேமிப்பினை ஊக்குவிக்கும் விதமாக ‘என் முதல் சேமிப்பு‘ எனும் பாராட்டு பத்திரமும் வழங்கப்படுகிறது எனக் கூறியுள்ளாா்.