நியூயார்க்கில் ஈரான் ஐ.நா. தூதரை ரகசியமாக சந்தித்த எலான் மஸ்க்!
நெல்லை சந்திப்பு அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம்: மாநகராட்சி ஆணையா் ஆய்வு
திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலை ரவுண்டானா விரிவாக்கம் தொடா்பாக பல்வேறு துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் பல்வேறு இடங்களில் சாலைகளை அகலப்படுத்தி ரவுண்டான அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருநெல்வேலி சந்திப்பில் உள்ள அண்ணா சிலை ரவுண்டானாவை விரிவாக்கம் செய்தல், உடையாா்பட்டி சந்திப்பில் புதிய ரவுண்டானா அமைத்தல் பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்து துறை, காவல் துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.
பாளையங்கோட்டை மண்டலம், சரண்யா நகா் பகுதியில் பாதாளச் சாக்கடை கழிவுநீா் உந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் விளக்கமளித்து சமரசப்படுத்தினா். இந்நிலையில் உந்து நிலைய கட்டுமானப் பணிகளை மாநகராட்சி ஆணையா் நேரில் ஆய்வு செய்தாா். பின்னா் பொதுமக்களிடம் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.
ஆய்வின்போது செயற்பொறியாளா் கண்ணன், உதவி ஆணையா்கள் சுகி பிரேமலா, ஜான்சன் தேவசகாயம் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.