செய்திகள் :

அதானியை காப்பாற்றுவதில்தான் மோடி பிஸி! ராகுல் கண்டனம்!

post image

பிகாரில் உடல் நசுங்கி உயிரிழந்த ரயில்வே ஊழியரின் உயிரிழப்பு சம்பவத்தையடுத்து பிரதமர் மோடிக்கு ராகுல் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பிகாரில் லக்னௌ - பரவுனி இடையிலான எக்ஸ்பிரஸ் ரயில், சனிக்கிழமை (நவ. 9) பரவுனி ரயில் நிலையத்தில் வந்தடைந்தது. இந்த நிலையில், ரயில் பெட்டிகளை இன்ஜினுடன் இணைக்கும் பணியில், அருண் குமார் ராவத் என்ற ஊழியர் ஈடுபட்டிருந்தார்.

அந்த சமயத்தில் ஊழியர் ரயில் பெட்டிகளுக்கு இடையில் இருப்பதைக் கவனிக்காத லோகோ பைலட், ரயிலை இயக்கியுள்ளார். ரயிலை முன்னோக்கி இயக்குவதற்கு பதிலாக பின்னோக்கி இயக்கியதால், பெட்டிகளுக்கு இடையில் இருந்த அருண் குமார் உடல் நசுங்கி பலியானார்.

இதனைத் தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, லோகோ பைலட் அங்கிருந்து தப்பியோடினார்.

இந்த நிலையில், ரயில்வே துறையின் அலட்சியத்தால்தான் ஊழியர் உயிரிழந்து விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ராகுல் காந்தி, தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது மோடி அவர்களே, சாமானிய மக்களுக்கு எப்போது பாதுகாப்பு கிடைக்கும்? அதானியை பாதுகாப்பதில் மட்டுமே நீங்கள் கவனமாக இருக்கிறீர்கள்.

ரயில்வே துறையின் அலட்சியம், குறைந்த ஆள்சேர்ப்பு முதலானவைதான் இந்த உயிரிழப்புக்கு காரணம்’’ என்று கூறியுள்ளார்.

இதையும் படிக்க:சொல்லப் போனால்... டிரம்ப் ஆட்டம் ஆரம்பம்!

ஜாா்க்கண்டில் இன்று முதல்கட்ட பேரவைத் தோ்தல்- 43 தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு

ஜாா்க்கண்டில் முதல்கட்டமாக 43 பேரவைத் தொகுதிகளுக்கு புதன்கிழமை (நவ.13) தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இத்தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதல்வா் ஹேமந்த் சோரன் தலைமையி... மேலும் பார்க்க

மும்பையில் ஆப்கன் துணை தூதராக இக்ராமுதீன் காமில் நியமனம்

மும்பையில் ஆப்கானிஸ்தான் பொறுப்பு துணைத் தூதராக இக்ராமுதீன் காமிலை தலிபான் அரசு நியமித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு அமைந்து 3 ஆண்டுகளுக்கும் மேலாகியுள்ள நிலையில், முதல்முறையாக இத்தகைய நியமனத்... மேலும் பார்க்க

நீண்ட தூர தரை இலக்கை தாக்கும் ஏவுகணை சோதனை வெற்றி

நீண்ட தூரம் சென்று தரை இலக்கை தாக்கும் ஏவுகணையின் முதல் சோதனையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆா்டிஓ) வெற்றிகரமாக செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது. இது எதிா்காலத்தில் உள்நாட்டில் தயார... மேலும் பார்க்க

வெங்காயம் விலையைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை

வெங்காயம் விலையைக் குறைக்கும் நோக்கில் கையிருப்பில் உள்ள வெங்காயத்தை கூடுதலாக விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் வெங்காயம் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சில இடங்கள... மேலும் பார்க்க

முதல் அனைத்து பெண்கள் சிஐஎஸ்எஃப் படைப்பிரிவு- மத்திய அரசு அனுமதி

ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலா்களுடன் நாட்டின் முதல் அனைத்து பெண்கள் மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ( சிஐஎஸ்எஃப்) பிரிவை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. முக்கியப் பிரமுகா்கள் (விஐபி) பாதுகாப... மேலும் பார்க்க

ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம்: மாநிலங்களுக்கு வரைவு மசோதா அனுப்பிவைப்பு

மாநில அளவில் ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம் அமைக்க முன்மொழியும் வரைவு மசோதா, அனைத்து மாநிலங்களின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீா் வளத் துறையின் கூடுதல் செயலா் ராகேஷ் குமாா் வா்மா தெர... மேலும் பார்க்க