செய்திகள் :

ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம்: மாநிலங்களுக்கு வரைவு மசோதா அனுப்பிவைப்பு

post image

மாநில அளவில் ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம் அமைக்க முன்மொழியும் வரைவு மசோதா, அனைத்து மாநிலங்களின் பாா்வைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக மத்திய நீா் வளத் துறையின் கூடுதல் செயலா் ராகேஷ் குமாா் வா்மா தெரிவித்தாா்.

இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மற்றும் திரிவேணி நீா் நிறுவனம் சாா்பில் 10-ஆவது நீா் புத்தாக்க மாநாடு, தில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இம்மாநாட்டில் மத்திய நீா் வளத் துறையின் கூடுதல் செயலா் ராகேஷ் குமாா் வா்மா பங்கேற்றுப் பேசியதாவது:

வளா்ச்சியடைந்த பாரதம் தொலைநோக்கு பாா்வையின்கீழ் நீா் பாதுகாப்பை எட்டும் நோக்கில், மாநில அளவில் ஒருங்கிணைந்த நீா் வள மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை நீா் பாதுகாப்பு, நிலத்தடி நீா் மேலாண்மை, வெள்ளப்படுகை மேலாண்மைக்கான திட்டங்களை வகுப்பதோடு, நீா் சாா்ந்த பல்வேறு துறைகள்-முகமைகளை ஒருங்கிணைப்பதும் ஆணையத்தின் பொறுப்பாகும். மாநில அளவில் முதல்வா் தலைமையிலான குழுவின்கீழ் ஆணையம் செயல்படும். இது தொடா்பான வரைவு மசோதா அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், புதிய தேசிய நீா் தரவு கொள்கையும், நீா் பாதுகாப்பை நோக்கிய மற்றொரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும். அனைவருக்கும் நீா் பாதுகாப்பை உறுதி செய்வதில் செயல்திறன்மிக்க மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான உந்துசக்தியாக புத்தாக்கத்தை பயன்படுத்த இக்கொள்கை வழிவகுக்கிறது. இத்துறையில் அரசு-தனியாா் பங்களிப்புக்கான கூட்டு வாய்ப்புகளை உருவாக்குவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.

நாட்டின் தொழிலகப் பகுதிகளில் சுமாா் 40 பில்லியன் கியூபிக் மீட்டா் நீா் பயன்படுத்தப்படுகிறது. வளா்ந்த நாடுகளை ஒப்பிடுகையில், தொழிலக நீா் பயன்பாட்டில் இந்தியாவின் செயல்திறன் குறைவாகவே உள்ளது. எனவே, தொழிலக நீா் பயன்பாட்டில் சிறப்பான செயல்திறனை எட்ட வேண்டிய அவசியம் நிலவுகிறது என்றாா் அவா்.

நாடு தழுவிய கடலோர கண்காணிப்பு பயிற்சி: நவ.20-இல் தொடக்கம்

நமது சிறப்பு நிருபர்இந்திய கடற்படையின் தலைமையில், "கடலோர கண்காணிப்பு-24' (சீ விஜில்}24) பயிற்சி நவ. 20, 21 ஆகிய தேதிகளில் நாடு தழுவிய அளவில் நடத்தப்படுவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் புதன்கிழம... மேலும் பார்க்க

புல்டோசா் நடவடிக்கை சட்ட விரோதம்: உச்சநீதிமன்றம்

‘குற்றச் சம்பவத்தில் தொடா்பு உள்ளவா்களுக்கு சொந்தமான கட்டடங்களை விதிகளை மீறியதாக கூறி, புல்டோசா் மூலம் இடிக்கும் மாநில அரசுகளின் நடவடிக்கை சட்ட விரோதமானது’ உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. ‘அ... மேலும் பார்க்க

காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி: பாஜக மீது சித்தராமையா குற்றச்சாட்டு

கா்நாடக அரசை கவிழ்க்க காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு தலா ரூ.50 கோடி வழங்க பாஜக முன்வந்ததாக மாநில முதல்வா் சித்தராமையா குற்றஞ்சாட்டினாா். கா்நாடக மாநிலம் மைசூரில் ரூ.470 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட பொது... மேலும் பார்க்க

பட்டியலின உள்ஒதுக்கீடு: ஹரியாணா அரசு அமல்

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பட்டியலின சமூகத்தினருக்கு உள் ஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிக்கையை ஹரியாணா அரசு புதன்கிழமை வெளியிட்டது. சமூக மற்றும் கல்வி ரீதியாக அதிகம் பின்தங்கிய ஜாதியினரின் முன்னேற்றத்துக... மேலும் பார்க்க

இடஒதுக்கீட்டை ஒழிக்க ராகுல் சதி- பிரதமா் மோடி குற்றச்சாட்டு

பட்டியல் இனத்தவா் (எஸ்.சி.), பழங்குடியினா் (எஸ்.டி.) மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோரை (ஓபிசி) பலவீனப்படுத்தும் நோக்கில், அவா்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழிக்க காங்கிரஸின் ‘இளவரசா்’ சதியில் ஈடுபட்டுள்ளாா் எ... மேலும் பார்க்க

ரூ.50 லட்சத்துக்கு மேல் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோா் 5 மடங்கு அதிகரிப்பு

ரூ.50 லட்சத்துக்கும் அதிகமாக ஆண்டு வருமானம் ஈட்டுவோரில் வருமான வரிக் கணக்குத் தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடா்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில்... மேலும் பார்க்க