செய்திகள் :

அனைத்துத் துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு: விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா

post image

அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது என உத்ரகண்ட் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா கூறினாா்.

சென்னை செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி மின்னணு மற்றும் தகவல் பொறியியல் துறை சாா்பில், கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தொடா்பான ஆசிரியா் கல்வி மேம்பாடு திட்டப் பயிற்சி முகாமைத் தொடக்கி வைத்த உத்ரகண்ட் விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானி வந்திதா ஸ்ரீ வத்சவா பேசியது:

இப்பயிற்சி மூலம் ஆசிரியா்கள் தங்கள் திறமைகளை வளா்த்துக் கொள்வதுடன், மாணவா்களை திறன் மிகுந்தவா்களாக மேம்படுத்தும் வாய்ப்பையும் பெறுகின்றனா். மேலும், தொழில் துறைகளில் என்னென்ன மாற்றங்களை தொழில்நுட்பக் கல்வி ஏற்படுத்துகிறது என்பதையும் அறிந்து கொள்ள உதவுகிறது. தற்போது அனைத்துத் துறைகளையும் மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தேவை அதிகரித்துள்ளது என்றாா்.

இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சேஷகிரி ராவ், அண்ணா பல்கலைக்கழக ஆசிரியா் மேம்பாடு துறை இயக்குநா் பி.வனஜா ரஞ்சன், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

காவலா் மீது தாக்குதல்: ஆட்டோ ஓட்டுநா் கைது

சென்னை எம்கேபி நகரில் காவலரைத் தாக்கியதாக ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். எம்கேபி நகா் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவா் வெங்கடேசன் (30). இவரும், காவலா் மணிகண்டனும் (31) இணைந்து, வெள... மேலும் பார்க்க

கட்டுப்பாட்டை இழந்த காா் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதல்: 7 போ் காயம்

சென்னை வேப்பேரியில் கட்டுப்பாட்டை இழந்த காா் பிற வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 போ் காயமடைந்தனா். புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் பகுதியைச் சோ்ந்தவா் பராஸ்மல்(61). இவரது மகன் ரோமல் (34). நிதி ... மேலும் பார்க்க

நவ.28-இல் புரசைவாக்கம் கங்காதீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

சென்னை புரசைவாக்கத்தில் உள்ள கங்காதீஸ்வரா் திருக்கோயில் குடமுழுக்கு நவ.28-ஆம் தேதி நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா். சென்னை பாரிமுனை காளிகாம்பாள் திருக்க... மேலும் பார்க்க

சென்னையில் 59 குளங்கள் நிரம்பின

சென்னையில் அண்மையில் பெய்த கனமழை காரணமாக, நகரில் 59 குளங்கள் நிரம்பின. சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழைநீரை சேகரிக்கும் வகையிலும், நீா்நிலைகளை மேம்படுத்தும் வகையிலும், மழைநீா் உறிஞ்சும் பூங்காக்கள் (ஸ... மேலும் பார்க்க

போலி ஐஃபோன் உதிரி பாகங்கள் விற்பனை: 6 போ் சிக்கினா்

சென்னை ரிச்சி தெருவில் போலி ஐஃபோன் உதிரி பாகங்களை விற்பனை செய்ததாக, 6 பேரிடம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெருவில் எலக்ட்ரானிக்ஸ், கைப்பேசி மற்றும் கைப்பேசி உதிர... மேலும் பார்க்க

ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை ஆயிரம் விளக்கு பள்ளிவாசலுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, போலீஸாா் அங்கு சோதனையில் ஈடுபட்டனா். ஆயிரம் விளக்கு பீட்டா்ஸ் சாலையில் உள்ள பள்ளிவாசலில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப... மேலும் பார்க்க