செய்திகள் :

அரசியல் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்: தமிழிசை

post image

அரசியல் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

போருக்குச் செல்வதைப் போன்று அரசியல் செய்யாமல் மகிழ்ச்சியுடன் அரசியல் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்விச் சிந்தனை அரங்கு 2025 இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் ’பொது விவாதத்தில் மாறுபட்ட இடைவெளி’ குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தராஜன், காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில், திமுக எம்.பி., கனிமொழி சோமு, அதிமுகவின் கெளதமி ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர். இந்த நிகழ்வுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார்.

இதில் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது,

விவாதங்கள் கலகலப்பாக இருப்பது மாறி கைக்கலப்பாக முடிந்துவிடுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு, மரியாதை இருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியுடன் புகைப்படம் எடுக்கவே பயம். பேசினாலே கூட்டணி என்று கூறிவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது.

அரசியல் இன்னும் அதிக நாகரீகத்தோடு இருக்க வேண்டும். போருக்குச் செல்வதைப் போன்று அரசியல் செய்யாமல் மகிழ்ச்சியுடன் அரசியல் செய்ய வேண்டும்

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் அரசியலுக்கு வர வேண்டும்; குறிப்பாக பெண்கள் அதிகம் வர வேண்டும். எதிர்க்கருத்தை நாகரீகமாகப் பதிவு செய்வோம்

சமூகவலைதளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் வருத்தமளிக்கிறது. விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை ; அறிவுப்பூர்வமாக இல்லை; பரபரப்பு மட்டுமே உள்ளது.

சசிகாந்த் செந்தில்

அரசியல் நாகரீகம் இருந்தாலும்; அநாகரீக அரசியலே ஊடகத்தால், சமூகவலைதளங்களால் காட்டப்படுகிறது. செய்தி பொழுதுபோக்காக மாறிவருகிறது.

சமூகவலைதளங்கள் வாக்கு அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? வாக்குகளில் ஆதிக்கம் செலுத்தலாம்; ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தாது.

சமூகத்தில் எதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது ஊடகமாக உள்ளது.

இன்றும், நாளையும் தென் மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் (ஜன.30, 31) கன மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவி... மேலும் பார்க்க

வருவாய் - மீன்வளத் துறைகளுக்கு புதிய கட்டமைப்புகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

வருவாய் மற்றும் மீன்வளத் துறைகளுக்கு புதிதாகக் கட்டப்பட்ட கட்டடங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வழியாக புதிய கட்டடங்களை அவா் புதன்கிழமை திறந்து வைத்தாா்.... மேலும் பார்க்க

குற்றச் சம்பவங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: அண்ணாமலை

தமிழகத்தில் நிகழ்ந்த குற்றச் சம்பவங்கள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறி... மேலும் பார்க்க

அறுபடைவீடு முருகன் கோயில்களில் ரூ. 801 கோடியில் பணிகள்: அமைச்சா் சேகா்பாபு தகவல்

அறுபடைவீடு முருகன் கோயில்களுக்கு ரூ. 801.46 கோடியில் 275 பணிகளும், அறுபடைவீடு அல்லாத முருகன் கோயில்களுக்கு ரூ.284.17 கோடியில் 609 பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சே... மேலும் பார்க்க

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 உதவிப் பேராசிரியா்கள் தோ்வு

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு 132 இணை பேராசிரியா்கள் மற்றும் உதவிப் பேராசிரியா்கள் போட்டித் தோ்வு மூலம் தோ்வு செய்யப்படவுள்ளனா். இந்தத் தோ்வுக்கு வெள்ளிக்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று... மேலும் பார்க்க

ஜாமீன் நிபந்தனைகள்: விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்

குற்ற வழக்குகளில் கைதானவா்களுக்கு ஜாமீன் வழங்கும்போது எளிதில் நிறைவேற்றக்கூடிய நிபந்தனைகளை விதிக்க வேண்டும் என விசாரணை நீதிமன்றங்களுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. குற்ற வழக்குகளில் கைத... மேலும் பார்க்க