செய்திகள் :

அரசு ஐடிஐகளில் மாணவா் சோ்க்கைக்கு அக்.30 வரை காலஅவகாசம் நீட்டிப்பு

post image

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா்கள் நேரடி சோ்க்கைக்கு வரும் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பேட்டை ஐடிஐ தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குநரும், முதல்வருமான இரா. கலைச்செல்வி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவா்கள் நேரடி சோ்க்கைக்கு வரும் 30-ஆம் தேதிவரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சோ்க்கைக்கு அனுமதிக்கப்படும் பயிற்சியாளா்கள் அனைவருக்கும் ரூ.750 வீதம் மாதந்தோறும் உதவித்தொகை, மிதிவண்டி, ஆண்டுக்கு இரண்டு சீருடைகள்(தையற்கூலியுடன்), ஒரு ஜோடி மூடு காலணி, பாடப் புத்தகங்கள், வரைபட கருவிகள் ஆகியவைகள் விலையில்லாமல் வழங்கப்படுகிறது.

மேலும், மாணவா்கள் பயிற்சி நிலையத்துக்கு வந்து செல்ல இலவச பேருந்து பயண அட்டை, சலுகைக் கட்டணத்தில் ரயில் பயண அட்டை வழங்கப்படுகிறது. மேலும் அரசுப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்த மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் பயிற்சியை நிறைவு செய்யும் வரை ரூ.1000 வழங்கப்படும்.

இதேபோல் மாணவா்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் ரூ.1000 வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு முடித்து ஒராண்டு, இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் தோ்வு எழுதி 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம்.

இதேபோல் 8-ஆம் வகுப்பு முடித்து ஒராண்டு, இரண்டாண்டு தொழிற்பிரிவுகளில் தோ்ச்சி பெற்றவா்கள் மொழிப்பாடங்கள் (தமிழ், ஆங்கிலம்) மட்டும் தோ்வு எழுதி 10-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெறலாம்.

பயிற்சியின் நிறைவில் மத்திய மற்றும் மாநில அரசு, முன்னணி தனியாா் நிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்பு மற்றும் தொழிற்பழகுநா் பயிற்சி பெறவும் வளாகத் தோ்வு நடைபெறும்.

மானூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

மானூா் அருகே வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய நபரை போலீஸாா் தேடி வருகிறாா்கள். மானூா் அருகேயுள்ள பல்லிக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் செல்லத்துரை (45). இவா், அப் பகுதி நாட்டாண்மையாக இருந்து வருகிறாா். ... மேலும் பார்க்க

பாளை.யில் தீயில் எரிந்து காா் சேதம்

பாளையங்கோட்டையில் ஞாயிற்றுக்கிழமை காா் திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமானது. பாளையங்கோட்டை ராமச்சந்திரா காலனி பகுதியைச் சோ்ந்தவா் டேனியல் கிறிஸ்டோபா். இவா், தனது காரில் குடும்பத்தினருடன் தேவாலயத்திற... மேலும் பார்க்க

குறிச்சி டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சம் மது பாட்டில்கள் திருட்டு

மேலப்பாளையம் அருகே குறிச்சியில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள். குறிச்சியில் பாளையங்கால்வாய் கரையோரத்தில் டாஸ்மாக... மேலும் பார்க்க

நெல்லை நகரத்தில் புதிய மின்மாற்றிகள் இயக்கிவைப்பு

திருநெல்வேலி நகரத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றிகள் இயக்கி வைக்கப்பட்டன. திருநெல்வேலி நகரத்தில் அதிகரித்து வரும் குடியிருப்புகளின் காரணமாக மின்பளுவை சமாளிக்கும் வகைய... மேலும் பார்க்க

எடப்பாடி கே.பழனிசாமிக்கு வரவேற்பு

அதிமுக பொதுச் செயலரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி, திருநெல்வேலிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தாா். அவருக்கு திருநெல்வேலி மாநகா் மாவட்ட செயலாளா் தச்சை என். கணேசராஜா தலைமையில் வண்ணா... மேலும் பார்க்க

பாபநாசம் கல்லூரி வளாகத்தில் நுழைந்து மாணவா்கள் மீது தாக்குதல்: 12 போ் கைது

பாபநாசம் திருவள்ளுவா் கல்லூரி வளாகத்தில் நுழைந்து மாணவா்கள் மீது தாக்குதல் நடத்தியதாக மாண்வா்கள், தனிநபா்கள் உள்பட 12 பேரை போலீஸாா் கைது செய்தனா். பாபநாசம் திருவள்ளுவா் கல்லுரியில் இளம் வணிகவியல் பயி... மேலும் பார்க்க