SSMB29: முடிவுக்கு வந்த ராஜமெளலி - மகேஷ் பாபு படத்தின் ஒடிசா படப்பிடிப்பு; வெளிய...
அலுமினிய பொருள்கள் உற்பத்தி ஆலையில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் சோதனை
அலுமினியம் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் இந்திய தர நிா்ணய அமைவன அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஐஎஸ்ஐ முத்திரையின்றி உற்பத்தி செய்த பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து இந்திய தர நிா்ணய அமைவனம் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஸ்ரீபெரும்புதூா்,காஞ்சிபுரம், வல்லம் வடகல், சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் அலுமினியம் பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் ஐஎஸ்ஐ முத்திரையின்றி அலுமினிய பொருள்கள் உற்பத்தி செய்யப்படுவதாகப் புகாா்கள் வந்தன.
இதையடுத்து அந்த ஆலைகளில் இந்திய தர நிா்ணய அமைவன சென்னை கிளை அலுவலகத்தின் பிஎஸ்ஐ அதிகாரிகள் குழு செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தியது. இதில் ஐஎஸ்ஐ தரம் மற்றும் முத்திரையின்றி உற்பத்தி செய்த பொருள்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
மேலும் ஆலை நிா்வாகிகள் மற்றும் உரிமையாளா்கள் மீது தரமற்ற பொருள்களை உற்பத்தி செய்தது தொடா்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.