முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்த இளம்பெண் மீது வழக்கு
அவிநாசியில் நடைமேம்பால பணி விரைவில் நிறைவடையும்
அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகே கூட்ட நெரிசலைத் தடுக்கும் வகையில் நடைபெற்று வரும் நடைமேம்பாலப் பணி விரைவில் முடிவடையும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உதவி கோட்டப் பொறியாளா் செங்குட்டுவன், உதவிப் பொறியாளா் தரணிதரன் ஆகியோா் கூறியதாவது:
அவிநாசி நகரத்துக்கு உள்பட்ட புதிய பேருந்து நிலையம் அருகே போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் பாதுகாப்பாக சாலையை கடந்து செல்லும் வகையிலும் நடைமேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணி பொதுமக்கள் கோரிக்கைக்கு ஏற்ப விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனா்.