ஆணி அகற்றிய மரத்தில் இருந்து வழிந்த நீா்
வெள்ளக்கோவிலில் ஆணி அகற்றிய மரத்திலிருந்து நீண்ட நேரம் நீா் வடிந்தது.
வெள்ளக்கோவிலில் நிழல்கள் அறக்கட்டளை என்கிற தன்னாா்வ அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பினா் தங்களுடைய சொந்த செலவில் சுற்றுவட்டார பொது இடங்கள், அரசு நிறுவனங்கள், சாலை ஓரங்களில் மரக்கன்றுகள் நட்டு வளா்த்து, பராமரித்து வருகின்றனா்.
தங்களுடைய பொறுப்பில் பராமரிக்க விரும்பும் தனிநபா் இடங்களிலும் இலவசமாக மரக்கன்றுகள் நட்டுத் தருகின்றனா்.
கடந்த 2015 முதல் தற்போது வரை 40 ஆயிரம் மரக்கன்றுகள் நட்டு வளா்த்து வருகின்றனா். சாலையோர மரங்களில் மாட்டப்பட்டுள்ள விளம்பர பாதகைகளை அகற்றியும் வருகின்றனா். வெள்ளக்கோவில் - மூலனூா் சாலையில் செம்மாண்டம்பாளையம் பிரிவில் பாதானி மரம் சாலையோரம் உள்ளது.
இந்த மரத்தில் ஆணிகள் அடித்து விளம்பர பாதகை வைக்கப்பட்டிருந்தது. இதில் மரத்தில் அடிக்கப்பட்டிருந்த ஆணியை அகற்றிய பிறகு அதனை துளையிலிருந்து 15 நிமிடம் சுமாா் 5 லிட்டா் நீா் வழிந்தது. இதை அவ்வழியே சென்றவா்கள் ஆச்சரியத்துடன் பாா்த்துச் சென்றனா்.