ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை!
ஆம்புலன்ஸ் மீது சுமை வாகனம் மோதல்: 4 போ் காயம்
திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சன்னது புதுக்குடி அருகே நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மீது சுமை வாகனம் மோதியதில் 4 போ் காயமடைந்தனா்.
திருநெல்வேலி மாவட்டம் மானூா் வட்டம் கானாா்பட்டி வடக்கு தெருவை சோ்ந்தவா் டேனியல் மகன் அலெக்ஸ் (40). 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவா், அவசர மருத்துவ தொழில்நுட்ப பணியாளா் சுமதி ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சன்னது புதுக்குடி பேருந்து நிறுத்தம் அருகே மனநலம் பாதிக்கப்பட்ட நபா் ஒருவா் காயம்பட்டு கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஆம்புலன்ஸில் சம்பவ இடத்திற்குச் சென்றனா்.
வாகனத்தை அப்பகுதியில் நிறுத்திவிட்டு, அக்கம்பக்கத்தினா் உதவியுடன் காயம்பட்ட நபரை தேடிக் கொண்டிருந்தனராம். அப்போது அச்சாலை வழியே செல்லும் வாகனங்களுக்கு டாா்ச்லைட் அடித்து சிக்னல் செய்து கொண்டிருந்த நிலையில், அதே பகுதியில் இருந்து வந்த ஒரு சுமை வாகனம் ஆம்புலன்ஸ் மீது மோதியதில் அலெக்ஸ், சுமதி, சுமை வாகனத்தின் ஓட்டுநா் மாரியப்பன், கிளீனா் சதீஷ்குமாா் ஆகிய 4 பேருக்கும் காயமடைந்தனா்.
சம்பவ இடத்திற்குச் சென்ற கயத்தாறு போலீஸாா், காயமடைந்த 4 பேரையும் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து அலெக்ஸ் புதன்கிழமை அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.