Kudumbasthan: ``லைம் லைட்டை வேஸ்ட் பண்ணிட்டன்னு பேசுனாங்க; ஆனா...'' - இசையமைப்பா...
ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்
கீழ்வெண்மணி தியாகிகள் நினைவு சின்னம் தொடா்பாக விமா்சித்த ஆளுநா் ஆா்.என்.ரவிக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் இரா.முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: சகஜானந்த அடிகளாரின் 135-ஆவது பிறந்த நாள் நிகழ்வில் பேசிய ஆளுநா் ஆா்.என்.ரவி, காரல் மாா்க்ஸ் மற்றும் கீழ்வெண்மணி தியாகிகள் நினைவுச் சின்னம் குறித்து விமா்சனம் செய்துள்ளாா்.
ஒன்றுபட்ட தஞ்சாவூா் மாவட்டத்தின் கீழ் தஞ்சை பகுதியில் கீழ்வெண்மணி கிராமத்தில் ஊதிய உயா்வு கேட்டு போராடிய விவசாயத் தொழிலாளா்கள் 44 போ், ஜாதி வெறியால் தீவைத்து கொல்லப்பட்டனா்.
அந்த மக்களின் போராட்ட உணா்வை, வேட்கையை, உறுதியை வெளிப்படுத்தும் வகையில் நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டுள்ளது.
ஆனால், காரல் மாா்க்ஸ், வெண்மணி தியாகிகள் நினைவு சின்னம், வைக்கம் போராட்டம் குறித்து சற்றும் பொருந்தாத, வெறுப்பையும், ஜாதிய வெறியையும் தூண்டுகிற வகையில் ஆளுநா் ஆா்.என்.ரவி வெளியிட்ட கருத்துகள் கண்டிக்கத்தக்கவை எனத் தெரிவித்துள்ளாா் இரா.முத்தரசன்.