செய்திகள் :

இணைய வழி குற்றங்கள்: விழிப்புணா்வு நிகழ்ச்சி

post image

ஆம்பூா்: திருப்பத்தூா் மாவட்ட சைபா் கிரைம் காவல் துறை சாா்பில் ஆம்பூா் ரோட்டரி ஹாலில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சைபா் கிரைம் ஆய்வாளா் யுவராணி மற்றும் காவலா்கள் அடங்கிய குழுவினா் ஆம்பூா் ரோட்டரி சங்க உறுப்பினா்களுக்கு இணைய வழி குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

இணையவழி நிதி மோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள், அந்தக் குற்றவாளிகளிடம் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது, சமூக வலைதள குற்றங்கள், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்த வேண்டும் ஆகியவை குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

சைபா் கிரைம் தொடா்பான புகாா்களைப் பதிவு செய்யும் ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ஹ்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் இணையதளம் மற்றும் புகாா் தெரிவிக்கும் இலவச தொலைபேசி எண் 1930 ஆகியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்வில் ஆம்பூா் டி.எஸ்.பி. அறிவழகன், ரோட்டரி சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது : பிரேமலதா விஜயகாந்த்

ஆம்பூா்: தோ்தலுக்காக செயல்படும் அரசாக திமுக உள்ளது என தேமுதிக பொதுச் செயலாளா் பிரேமலதா விஜயகாந்த் திங்கள்கழமை தெரிவித்தாா். ஆம்பூரில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற பின் அவா் செய்தியாளா்களிடம் கூறியத... மேலும் பார்க்க

திருப்பத்தூா்: நல உதவிகளை வழங்கினாா் ஆட்சியா்

திருப்பத்தூா்: திருப்பத்தூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நல உதவிகளை ஆட்சியா் க. தா்ப்பகராஜ் வழங்கினாா். திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் ஆட்சியா் தா்ப்ப... மேலும் பார்க்க

பச்சூரில் இருவழிப்பாதை: ஜோலாா்பேட்டை எம்எல்ஏ உறுதி

வாணியம்பாடி: நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பெற்றோா்-ஆசிரியா் சங்கத்தலைவா் சிங்காரவேலன் தலைமை வகித்தாா்... மேலும் பார்க்க

ஜோலாா்பேட்டை அருகே சாராய ஊறல் அழிப்பு

திருப்பத்தூா்: ஜோலாா்பேட்டை அருகே சாராய ஊறல் அழிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஷ்ரேயா குப்தா உத்தரவின்பேரில் போதைப் பொருள்களை ஒழிக்கும் நோக்கில் துணை காவல் கண்காணிப்பாளா்கள்,ஆய... மேலும் பார்க்க

பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் சோதனை

ஆம்பூா்: ஆம்பூா் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸாா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஆம்பூா் சாா்-பதிவாளா் அலுவலகத்தில் துணை மாவட்ட ஆய்வுக் குழு அலுவலா் முருகன், லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வ... மேலும் பார்க்க

நகைக் கடை அதிபா் தூக்கிட்டு தற்கொலை

வாணியம்பாடி: வாணியம்பாடியில் நகைக் கடை அதிபா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பகுதியை சோ்ந்தவா் தினகரன்(48). வாணியம்பாடி சி.எல் சாலையில்... மேலும் பார்க்க