`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
இணையத்தைக் கலக்கும் தோனி - சந்தீப் ரெட்டி வங்கா விளம்பரம்!
மகேந்திர சிங் தோனி மற்றும் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இணைந்து நடித்த விளம்பரம் ரசிகர்களிடம் வைரலாகியுள்ளது.
இந்தாண்டு ஐபிஎல் போட்டி மார்ச் 22 முதல் துவங்கவுள்ளதால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கான பயிற்சியில் தோனி ஈடுபட்டுள்ளார். இப்பயிற்சிக்கு முன் சில விளம்பரங்களில் நடித்து கொடுத்திருக்கிறார்.
அப்படி, பிரபல சைக்கிள் நிறுவனம் ஒன்று தங்களின் புதிய எலக்ட்ரிக் சைக்கிளுக்கான விளம்பரத்தில் நடிகர் தோனியை நடிக்க வைத்திருக்கின்றனர்.
இதையும் படிக்க: சிம்புவுக்கு ஜோடியாகும் கயாது லோஹர்!
இந்த விளம்பரம் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அனிமல் பட காட்சிகளின் சாயலைக் கொண்டுள்ளதுடன் இதில் சந்தீப் ரெட்டியும் தோனியுடன் இணைந்து நடித்துள்ளார்.
Animal For A Reason @e_motorad@msdhonipic.twitter.com/pNhBrJkXi2
— Sandeep Reddy Vanga (@imvangasandeep) March 18, 2025
அனிமல் படத்தை மறுஉருவாக்கம் செய்ததுபோன்ற காட்சிகளும் கிளைமேக்ஸும் சைக்கிள் விளம்பரத்திற்காக ரசிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த விளம்பர விடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது.
அனிமல் ஃபார் ரீசன் (animal for reason) என சந்தீப் ரெட்டி வங்கா தன் எக்ஸ் பக்கத்தில் விடியோவை பகிர்ந்துள்ளார்.