செய்திகள் :

``இது என் நிர்வாண படம்; ஆனால்.." -நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி வேதனையாக பேசியது என்ன?

post image

டீப்ஃபேக் ( DeepFake) போன்ற தவறான விஷயங்கள் சமூகத்தில் அதிகமாக பரப்பப்படுவதால் இதற்கு எதிரான சட்டங்களின் அவசர தேவையை உணர்த்தும் வகையில் ஒரு துணிச்சலான செயலில் ஈடுபட்டுள்ளார் நியூசிலாந்து எம்.பி லாரா மெக்லூர்.

மே 14 ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது மெக்லூர் AI யால் உருவாக்கப்பட்ட தனது நிர்வாண படத்தை அங்கு காட்சிப்படுத்தினார்.

அந்த நிர்வாண படத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் காட்சிப்படுத்தும் போது "இது என்னுடைய நிர்வாண படம்.. ஆனால் இது உண்மை அல்ல" என்று கூறினார்.

எளிதில் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதுபோன்ற டீப்ஃபேக் ஆபாச படங்கள் உருவாக்கப்படுகிறது. அதுவும் ஐந்து நிமிடத்திற்கும் குறைவான நேரமே இதற்கு எடுத்துக் கொண்டதாகவும் அவர் விளக்கினார். இதனால் ஏற்படும் விளைவுகளையும், தாக்கத்தையும் உணர்த்துவதையே இவரது குறிக்கோளாக இருந்தது.

மேலும் சமூக வலைதளங்களில் இந்த வீடியோவை வெளியிட்ட அவர் ”தொழில்நுட்பமே மோசமாக இல்லை எனும் இதனை பயன்படுத்தும் விதம் அச்சுறுத்தலாக இருப்பதாக குறிப்பிட்டார்.

பெண்கள் மற்றும் டீனேஜர்களை இது போன்ற துஷ்பிரயோகம் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும் ”அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கான பாதுகாப்புச் சட்டத்தை அவசரப்படுத்த வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளவும் வலியுறுத்தியுள்ளார் லாரா.

இதற்கு நியூசிலாந்தில் உள்ள சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் லாராவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலான டீப்ஃபேக்ஆபாச புகைப்படங்கள் ஒப்புதல் இல்லாமல் உருவாக்கப்படுவதாகவும், குறிப்பாக பெண்களை குறி வைப்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

பாலியல் குற்றக் கொடூரர்களே... நீங்களெல்லாம் மகன்/மாமன்/கணவன்/சகோதரன்/தந்தை/தாத்தா தானே?

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் வழங்கப்படும் தீர்ப்புகள்... நீதித்துறையும் காவல்துறையும் அரசாங்கமும் பெண்களின் பாதுகாப்புக்கு உடன் நிற்பதை உறுதி செய்யும் சமூக அறிவிப்புகளே. அந்த வகையில், சென்னை, அண்ணா ப... மேலும் பார்க்க

`குளிர்பானத்தில் மயக்க மருந்து' மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள்.. 3 பேர் கைது

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரியில், 3-வது ஆண்டு படிக்கும் மாணவியை அவருடன் படிக்கும் சக மாணவர் ஒருவர் சினிமாவிற்கு செல்லலாம் என்று கூறி அழைத்துள்ளார். மாணவியும் அவரை நம்... மேலும் பார்க்க