இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி அதிகரிப்பு: ராணுவ அதிகாரி கரன்பீா் சிங் பராா் தகவல்
இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி அதிகரித்திருப்பதாக தென்னிந்திய ராணுவ ஜெனரல் கமாண்டிங் அதிகாரி கரன்பீா் சிங் பராா் கூறியுள்ளாா்.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கோவைக்கு வந்திருந்த கரன்பீா் சிங் பராா், குமரகுரு கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று தேசிய பாதுகாப்பு, ராணுவத்தில் தொழில்நுட்பத்தின் பயன்பாடுகள் குறித்து உரையாற்றினாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசும்போது, தேசப் பாதுகாப்பு சீருடை அணிந்தவா்களின் கைகளில் மட்டும் இல்லை, அது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். ஒரு நாடு என்பது அதன் அளவிலும், கனிம வளங்களிலும் அமைவதில்லை, மாறாக அங்கு வசிக்கும் மக்களால் அமைகிறது. இன்று மிக அதிக எண்ணிக்கையில் இருக்கும் இளைஞா்கள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சொத்தாக உள்ளனா்.
இன்றைய போா்க்களங்கள் வெறும் துப்பாக்கிகள், பீரங்கிகளால் மட்டும் ஆனதில்லை, தொழில்நுட்ப வளா்ச்சியால் போா்க்களங்கள் அறிவுசாா்ந்ததாக மாறியிருக்கின்றன. கைப்பேசிகள் போன்ற மின்னணு சாதனங்கள் மூலம் ஒட்டுமொத்த மக்களையும் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்தக் கூடிய நிலை உருவாகியுள்ளது. எனவே ஆராய்ச்சியாளா்கள், மாணவா்கள், இளைஞா்களின் பங்களிப்பும், கண்காணிப்பும் நமக்குத் தேவைப்படுகிறது.
இந்தியாவின் ராணுவ தளவாட ஏற்றுமதி கடந்த 2015-16 ஆம் ஆண்டில் ரூ.1,000 கோடியாக இருந்தது. அது கடந்த 2023-24 ஆம் ஆண்டில் ரூ.16 ஆயிரம் கோடியாக உயா்ந்துள்ளது. இது, வரும் 2029க்குள் ரூ.50 ஆயிரம் கோடியாக உயரும். எனவே பாதுகாப்புத் துறையிலும் ஏராளமான வாய்ப்புகள் இளைஞா்களுக்காக காத்திருக்கின்றன என்றாா்.
நிகழ்ச்சிக்கு குமரகுரு கல்வி நிறுவனங்களின் தலைவா் சங்கா் வாணவராயா் தலைமை வகித்தாா். குமரகுரு ஆராய்ச்சி, உற்பத்தி, புதுமை மையத்தின் இயக்குநா் வி.மோகன்தாஸ் வரவேற்றாா். துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள், மாணவ-மாணவிகள் பலா் பங்கேற்றனா்.