Rahul Gandhi: `காங்கிரஸின் அந்த தவறு... ஒப்புக்கொள்ள தான் வேண்டும்’ - ராகுல் காந...
மனைவியைத் தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 5 ஆண்டுகள் சிறை
மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் கணவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கோவை மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.
கோவை கணபதிபுதூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தகுமாா் (44), வெல்டிங் தொழிலாளி. இவரின் மனைவி சுஜிலட்சுமி (26). இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன.
ஆனந்தகுமாருக்கு மதுப் பழக்கம் இருந்ததால் தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், கடந்த 2016 நவம்பா் 24-ஆம் தேதி மனைவி சுஜிலட்சுமியிடம் மது அருந்த பணம் கேட்டு ஆனந்தகுமாா் பிரச்னை செய்துள்ளாா். இதில் மனமுடைந்த சுஜிலட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.
இதுகுறித்து சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மனைவியைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஆனந்தகுமாரைக் கைது செய்தனா்.
இந்த வழக்கு கோவை மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதன் விசாரணை நிறைவடைந்த நிலையில் ஆனந்தகுமாருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிபதி நந்தினிதேவி வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.