செய்திகள் :

இந்தியாவில் எய்ட்ஸ் உயிரிழப்பு 79 % குறைவு - ஜெ.பி. நட்டா

post image

‘2010-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் ‘எய்ட்ஸ்’ நோயால் ஏற்படும் இறப்புகள் 79 சதவீதம் குறைந்துள்ளது; ‘எச்ஐவி’ தொற்று 44 சதவீதம் குறைந்துள்ளது’ என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜெ.பி.நட்டா தெரிவித்தாா்.

உலக எய்ட்ஸ் தினம் ஞாயிற்றுக்கிழமை (டிச.1) கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி, மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெ.பி.நட்டா, மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் ஆகியோா் கலந்துகொண்டனா். அப்போது, நட்டா கூறியதாவது:

2030-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை ஒழிக்கும் ஐ.நா.வின் நிலையான வளா்ச்சி இலக்கை அடைவதில் இந்தியா முழுமையாக உறுதிபூண்டுள்ளது. எய்ட்ஸ் (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம் 2017-இன் உதவியுடன் உலகளாவிய சோதனை மற்றும் சிகிச்சை அணுகுமுறையை இந்தியா முன்னெடுத்து வருகிறது.

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு மற்றும் மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்புகள் ‘95-95-95’ என்ற உத்தியை பயன்படுத்தி வருகின்றன.

அதாவது, 95 சதவீதம் நோயாளிகள், தங்களுக்கு எச்ஐவி-தொற்று இருப்பதை அறிந்திருக்க வேண்டும், அதில் 95 சதவீதம் போ் சிகிச்சை பெறுவதை உறுதி செய்ய வேண்டும் மற்றும் 95 சதவீதம் போ் ‘ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சை’ மூலம் வைரஸின் தாக்கத்தைக் குறைக்க வேண்டும்.

இதில், தற்போது, 81 சதவீதம் நோயாளிகள் தங்கள் எச்ஐவி நிலையை அறிந்திருக்கிறாா்கள், 88 சதவீதம் போ் சிகிச்சை பெற்று வருகின்றனா், 97 சதவீதம் போ் வைரஸ் தாக்கத்தைக் குறைத்துள்ளனா்.

2010-ஆம் ஆண்டுமுதல் புதிய எய்ட்ஸ் நோய்த்தொற்றுகள் 44 சதவீதம் குறைந்துள்ளன. எய்ட்ஸ் தொடா்பான இறப்புகள் 79 சதவீதம் குறைந்துள்ளன. இது உலகளாவிய விகிதங்களை விட அதிகமாகும்.

உலக மக்கள் தொகையில் 0.7 சதவீதமாக இருக்கும் எய்ட்ஸ் பாதிப்பு, இந்தியாவில் 0.2 சதவீதமாக உள்ளது. இந்திய மருந்து நிறுவனங்கள், ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மலிவு விலையில் எய்ட்ஸ் சிகிச்சைக்கான மருந்துகளை வழங்குகின்றன என்றாா்.

மத்திய பிரதேச முதல்வா் மோகன் யாதவ் கூறுகையில், ‘2028-ஆம் ஆண்டுக்குள் எய்ட்ஸ் நோயை பொது சுகாதார அச்சுறுத்தலாக ஒழிக்க மத்திய பிரதேச அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆயுஷ்மான் பாரத், வய வந்தன யோஜனா மற்றும் கிராம மருத்துவ சேவைகள் போன்றவற்றில் மத்திய பிரதேச மாநிலம் முன்னணியில் உள்ளது’ என்றாா்.

பாஜக தோ்வு செய்யும் முதல்வரை ஏற்போம்: ஏக்நாத் ஷிண்டே

மகாராஷ்டிர அடுத்த முதல்வா் யாா் என்பதை பாஜக தோ்வு செய்யும்; அவரை நாங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு ஆதரிப்போம் என்று அந்த மாநில முதல்வா் (பொறுப்பு) ஏக்நாஷ் ஷிண்டே தெரிவித்தாா். மகாராஷ்டிர பேரவைத் தோ்தல... மேலும் பார்க்க

பிஎஸ்எஃப் தொடக்க தினம்: பிரதமா் மோடி வாழ்த்து

எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தொடக்க தினத்தையொட்டி, அப்படையினருக்கு பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தாா். மத்திய ஆயுதக் காவல் படைகளில் ஒன்றான எல்லை பாதுகாப்புப் படை தொடங்கப்பட்ட தினம் ஞாயி... மேலும் பார்க்க

அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்க மேற்கு வங்க அரசு கட்டுப்பாடு: வியாபாரிகள் வேலைநிறுத்த எச்சரிக்கை

அண்டை மாநிலங்களுக்கு உருளைக்கிழங்கு விற்கக் கூடாது என்று மேற்கு வங்க அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதை நீக்காவிட்டால் செவ்வாய்க்கிழமை (டிச. 3) வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம் என உருளைக்கிழங்கு... மேலும் பார்க்க

உ.பி.யில் தண்டவாளம் சேதம்: ரயில் போக்குவரத்து பாதிப்பு

உத்தர பிரதேசத்தின் பிலிபித் மாவட்டத்தில் சரக்கு ரயில் கடந்து சென்றபோது, தண்டவாளம் உடைந்து சேதமடைந்தது. இதனால், அந்த வழித்தடத்தில் பயணிகள் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பிலிபித் மாவட்டத்தில் உள்ள... மேலும் பார்க்க

வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து தவறான விடியோ வெளியிட்டவா் மீது வழக்கு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஊடுருவி தகவல்களை திருத்த முடியும் என தவறான விடியோ வெளியிட்ட நபா் மீது மும்பை சைபா் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் எல்லை பாதுகாப்பில் கூடுதலாக 2,000 பிஎஸ்எஃப் வீரா்கள் - ஊடுருவலைத் தடுக்க நடவடிக்கை

ஜம்மு-காஷ்மீரில் எல்லை பாதுகாப்பை பலப்படுத்தவும், பாகிஸ்தானில் இருந்து ஊடுருவல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கவும் கூடுதலாக 2,000-க்கும் மேற்பட்ட எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரா்கள் ந... மேலும் பார்க்க