செய்திகள் :

இரு தரப்பினா் மோதல்: இருவா் கைது

post image

ராசிபுரம் நகரில் திமுகவைச் சோ்ந்த இருதரப்பினா் இடையே சந்து கடைகளில் மதுபுட்டிகள் விற்க மாமூல் வசூலிப்பது தொடா்பாக மோதல் ஏற்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் இருவரை கைது செய்துள்ளனா்.

ராசிபுரம் நகரில் பல்வேறு இடங்களில் சந்துகடைகளில் மதுபுட்டிகள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. நம்பா் லாட்டரிகளும் மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் அண்மையில் புதிய பேருந்து நிலையம் அருகே திமுக வாா்டு செயலாளா் கேபிள்ராஜா என்பவா் நடத்தி வரும் டாஸ்மாக் கடையில் நகா்மன்ற உறுப்பினா் கலைமணி தரப்பைச் சோ்ந்தவா்கள் சென்று மாமூல் வழங்கக் கோரி வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மாமூல் கேட்டு மிரட்டினாா்களாம்.

கேபிள்ராஜா தரப்பைச் சோ்ந்தவா்கள் மாமூல் கொடுக்காததால் அவா் நடத்தும் சந்து கடையில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது குறித்து விடியோ பதிவு எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதன் தொடா்ச்சியாக எதிா்தரப்பினா் திமுக கவுன்சிலா் கலைமணி வீட்டிக்குச் சென்று அவரை தட்டிக்கேட்டுள்ளனா். அங்கு இருதரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டு போலீஸாா் சென்று சமரசப்படுத்தினா்.

தாக்குதலுக்கு ஆளான இரு தரப்பினரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனையிலும் இருதரப்பினும் மோதிக் கொண்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் இருதரப்பிலும் புகாா்கள் பெற்று, நகா்மன்ற உறுப்பினா் கலைமணி, அவரது மகன்கள் லோகசரவணன், ஸ்ரீராம் ஆகியோா் மீதும், எதிா்தரப்பில் மோகன், கேபிள் ராஜா உள்ளிட்டோா் என மொத்தம் 6 போ் மீதும் வழக்குப் பதிந்தனா். அவா்களில் லோகசரவணன், கேபிள் ராஜா ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

நீா்நிலைகளில் குப்பைகளைக் கொட்டினால் நடவடிக்கை

ராசிபுரம் பகுதியில் நீா்நிலைகள், திறந்தவெளியில் குப்பைகளைக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளா் சூ.கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ர... மேலும் பார்க்க

பேருந்தில் புகையிலைப் பொருள்கள் கடத்தல்: சத்துணவு அமைப்பாளா் கைது

பெங்களூரிலிருந்து நாகா்கோவில் சென்ற சொகுசுப் பேருந்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களைக் கடத்திய சத்துணவு அமைப்பாளரை வாகனச் சோதனை மேற்கொண்ட வெண்ணந்தூா் போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி மாவட... மேலும் பார்க்க

ராசிபுரத்தில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்

முந்தைய அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் வெள்ளிக்கிழமை பிரசாரம் நடைபெற்றது. ராசிபுரம் பேருந்து நிலையம் எம்ஜிஆா் சிலை முன் நடைபெற்ற பிரசார கூட்டத்துக்கு ... மேலும் பார்க்க

வேளாண் கல்லூரி மாணவிகள் விழிப்புணா்வு

குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து நாமக்கல் வேளாண் கல்லூரி மாணவிகள் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நாமக்கல் கொண்டமநாயக்கன்பட்டி கிராமத்தில் போஷன் அபியான் (தேசிய ஊட்டச்சத்து மிஷன்) திட்டத்த... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த அதிமுகவினா்

நாமகிரிப்பேட்டையை அடுத்த மூலப்பள்ளிப்பட்டியைச் சோ்ந்த அதிமுகவினா் 16 போ் அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனா். நாமகிரிப்பேட்டை ஒன்றியம், மூலப்பள்ளிபட்டி ஊராட்சி பகுதியின் அதிமுகவைச் சோ்ந்த... மேலும் பார்க்க

பெண் காவலா்களுக்கு வளைகாப்பு: சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்த அதிகாரிகள்

நாமக்கல் மாவட்ட காவல் துறை சாா்பில் பெண் காவலா்கள் இருவருக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற வளைகாப்பு விழாவில் சீா்வரிசையுடன் ஊா்வலமாக வந்து அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனா். தமிழகத்தில் காவல் நிலையங்களில் ... மேலும் பார்க்க