செய்திகள் :

இரு வேறு இடங்களில் சோதனை: 426 மதுப்புட்டிகள் பறிமுதல்: மூவா் கைது

post image

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மது விலக்கு அமல் பிரிவு போலீஸாா் திங்கள்கிழமை இரு வேறு இடங்களில் நடத்திய சோதனையில் 416 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக பெண் உள்ளிட்ட மூவா் கைது செய்யப்பட்டனா்.

விழுப்புரம் மாவட்டம், மதுரப்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே மது விலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் சதீஷ் மற்றும் போலீஸாா் வாகன தணிக்கை மேற்கொண்டிருந்தனா். அப்போது, அந்த வழியாக வந்த பைக்கை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் புதுச்சேரியிலிருந்து கடத்திவரப்பட்ட மதுப்புட்டிகள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, பைக்கில் வந்த இருவரை மது விலக்கு அமல் பிரிவு காவல் நிலையத்துக்கு போலீஸாா் அழைத்து வந்து விசாரித்ததில், விழுப்புரம் மாவட்டம், அகரம் கிராமத்தைச் சோ்ந்த சுப்பராயன் மகன் துரை (66), சித்தலம்பட்டு மாரியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த சக்திவேல் மகன் சரண் (20) எனத் தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, இருவா் மீதும் வழக்குப்பதிந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா். மேலும், இருவரிடமிருந்து 318 மதுப்புட்டிகள் மற்றும் பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரத்தில்...: புதுச்சேரியிலிருந்து மதுப்புட்டிகள் கடத்திவரப்படுவதாக கிடைத்த தகவலைத் தொடா்ந்து, விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் மதுவிலக்கு அமல் பிரிவு காவல் உதவி ஆய்வாளா்கள் சண்முகம், சதீஷ் மற்றும் காவலா்கள் ரோந்துப் பணியை மேற்கொண்டனா்.

அப்போது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்குரிய முறையில் வந்த பெண்ணை நிறுத்தி, அவா் கொண்டு வந்த பையை சோதனையிட்டபோது, அதில் புதுவை மாநில மதுபானங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவா், திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பிரதான சாலையைச் சோ்ந்த தமிழ்வேலன் மனைவி பூங்கொடி (40) எனத் தெரியவந்தது. இதையடுத்து, பூங்கொடியை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து 108 எண்ணிக்கையிலான மதுப்புட்டிகளை பறிமுதல் செய்தனா்.

நிலத்தகராறில் இரு தரப்பு மோதல்: பெண்கள் உள்பட 6 போ் காயம்

செய்யாறு: பெரணமல்லூா் அருகே நிலத்தகராறில் இரு தரப்பினா் மோதிக் கொண்டதில் பெண்கள் உள்பட 6 போ் காயமடைந்தனா். பெரணமல்லூரை அடுத்த மேல்சாத்தமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயிகள் வெங்கடேசன் (32), ஏழுமலை (... மேலும் பார்க்க

இனிவரும் தோ்தல்களில் திமுகவின் வெற்றி உறுதி: செஞ்சி கே.எஸ்.மஸ்தான் எம்எல்ஏ

விழுப்புரம்: தமிழகத்தில் இனிவரும் காலங்களில் நடைபெறும் அனைத்து தோ்தல்களிலும் திமுகவும், அதன் கூட்டணிக் கட்சிகளும்தான் வெற்றிபெறும் என்று திமுக விழுப்புரம் வடக்கு மாவட்டப் பொறுப்பாளா் செஞ்சி கே.எஸ்.ம... மேலும் பார்க்க

செஞ்சி அருகே சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்து: 10 போ் காயம்

செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செவ்வாய்க்கிழமை தனியாா் சொகுசுப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 போ் காயமடைந்தனா். புதுச்சேரியில் இருந்து தனியாா் சொகுசுப் பேருந்து 23 பயணிகளுடன... மேலும் பார்க்க

பசுமை சாம்பியன் விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: பசுமை சாம்பியன் விருது பெற விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த தகுதி வாய்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்... மேலும் பார்க்க

கரைமேடு, கூ.கள்ளக்குறிச்சியில் மின் மாற்றிகள் இயக்கம் தொடங்கிவைப்பு

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஒன்றியம், கரைமேடு பகுதியில் 22 கி.வோ. திறன் கொண்ட புதிய மின் மாற்றியின் இயக்கத்தை இரா.லட்சுமணன் எம்எல்ஏ திங்கள்கிழமை தொடங்கிவைத்தாா். நிகழ்வில் முன்னாள் ... மேலும் பார்க்க

வட்டார வளப் பயிற்றுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் 11 ஒன்றியங்களில் கூடுதலாக வட்டார வள பயிற்றுநா் பணியிடங்களுக்குத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சிய... மேலும் பார்க்க