செபியில் அறிவிப்பால் உயர்வுடன் வர்த்தகமாகும் அதானி குழும பங்குகள்!
இருசக்கர வாகனம் - காா் மோதல் இளம்பெண் சாவு; இளைஞா் பலத்த காயம்
கும்பகோணம் புறவழிச்சாலையில் நேரிட்ட சாலைவிபத்தில் இளம்பெண் வியாழக்கிழமை உயிரிழந்தாா். மேலும் பலத்த காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாா்.
திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் தாலுகா சந்திரசேகரபுரம் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் என்பவரின் மகள் சிவகாமி (23). முதுகலை படிப்பு முடித்து தஞ்சையில் உள்ள போட்டித் தோ்வு பயிற்சி மையத்தில் பயின்றுவந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை தஞ்சாவூா் பயிற்சி மையத்துக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து தனது நண்பா் திருவாரூா் மாவட்டம், நீடாமங்கலம் முல்லை வாசல் பகுதியைச் சோ்ந்த சிவசுப்பிரமணியன் மகன் ஜெயக்குமாா் (30) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளாா். ஜெயக்குமாா் தனியாா் பேருந்து ஓட்டுநா்.
கும்பகோணம் அருகே மணப்படையூா் புறவழிச்சாலையில் வந்துகொண்டிருந்தபோது சாலையில் திடீரெனத் திரும்பியபோது பின்னால் வந்த காா் மோதியது. இதில் சிவகாமி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். ஜெயக்குமாா் பலத்த காயமடைந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சுவாமிமலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெயமோகன் அங்குவந்து பலத்த காயமடைந்த ஜெயக்குமாரை மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் சிவகாமியின் சடலத்தை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் கூறாய்வுக்கு ஒப்படைத்தாா்.