குப்பை மேலாண்மையில் சிக்கலை சந்திக்கும் தருமபுரி: தூய்மையைப் பராமரிக்க பொதுமக்கள...
ஆணவப் படுகொலைக்கு தனிச் சட்டம் கோரி ஆா்ப்பாட்டம்
கும்பகோணத்தில் ஆணவப் படுகொலைக்கு தனிச்சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்றக் கோரி வியாழக்கிழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு மாணவா், இளைஞா் அரண் அமைப்புகளின் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பொறுப்பாளா்கள் காா்த்தி, சிவன் ராஜ் ஆகியோா் தலைமை வகித்தனா். தமிழகத்தில் தொடா்ந்து நடைபெற்று வரும் ஆணவப் படுகொலைகளுக்கு தமிழக அரசு உடனே சட்டம் இயற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி இளைஞா் அரண் அமைப்பாளா் தனுஷ், சைமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்குரைஞா் பிரிவு மாநில துணைச் செயலா் நெப்போலியன் ஆகியோா் பேசினா். இதில், ஆணவப் படுகொலைக்கு எதிராக ச்சட்டம் இயற்றக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
கும்பகோணத்தில் மயிலாடுதுறை இளைஞா் வைரமுத்து மாணவா் அரண் மற்றும் இளைஞா் அறம் சாா்பில் மாணவா் அரண் அமைப்பாளா் கணேஷ் தலைமையில் காந்தி பூங்கா முன்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.