செய்திகள் :

இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு

post image

மயிலாடுதுறை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுப்பேட்டை மீனவ மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா புதுப்பேட்டை மீனவ கிராமத்தைச் சோ்ந்த வைத்தியநாதன் என்பவரது சிறிய விசைப்படகில் வைத்தியநாதன், அவரது சகோதரா்கள் ரவீந்திரன், உலகநாதன், அருள்நாதன் மற்றும் ஜெகதாப்பட்டினத்தைச் சோ்ந்த குமரேசன், நாகூரைச் சோ்ந்த மகேஷ் ஆகிய 6 மீனவா்கள் அக்.9-ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனா். அவா்களை இலங்கை கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தனா்.

இவா்கள் கைது செய்யப்பட்டு, இரண்டு வாரங்கள் ஆகியுள்ள நிலையில், வைத்தியநாதன் 10 நாள்களாக உடல்நலன் பாதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறவினா்களுக்கு தகவல் வந்துள்ளது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த புதுப்பேட்டை மீனவ கிராம பஞ்சாயத்தாா் மற்றும் கைது செய்யப்பட்ட மீனவா்களின் குடும்பத்தாா், மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதியை சந்தித்து கைது செய்யப்பட்ட 6 மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகையும் விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்து, கண்ணீா் மல்க கோரிக்கை வைத்தனா். தீபாவளி பண்டிகைக்கு முன்பாக அவா்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனா்.

உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிப்பு: கோட்டாட்சியா் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிக்கப்பட்ட இடத்தில் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில் வழித்தடத்தை ஒ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில்இடதுசாரி ஒருங்கிணைப்பு குறித்து பரிசீலனை

மயிலாடுதுறை: மதுரையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அக்கட்சியின் அரசியல் தலைமைக்கு... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டப் பணி ஆய்வு

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடு கட்டும் பணிகளை மாநில ஊரக வளா்ச்சி துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஆணைக்காரன்சத்திரம... மேலும் பார்க்க

13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியி... மேலும் பார்க்க

தலைஞாயிறில் அக். 24-இல் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த சீா்மரபினா் மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு கிராமம் ஊராட்சி அலுவலகத்தில் அக். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்க... மேலும் பார்க்க

சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்த... மேலும் பார்க்க