செய்திகள் :

13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்சியா்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் பராமரிப்புத் தொகையாக மாதம் தலா ரூ. 2,000 வீதம் 6,633 மனவளா்ச்சி குன்றியோருக்கு ரூ. 15.92 கோடி, கை, கால்கள் மிகவும் பாதிக்கப்பட்ட 1,227 பேருக்கு ரூ. 2.94 கோடி, தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட 138 பேருக்கு ரூ. 33.12 லட்சம், தொழுநோயால் பாதிக்கப்பட்ட 279 பேருக்கு ரூ. 66.96 லட்சம், முதுகு தண்டுவடம் பாதிப்பு, தண்டுவட மரப்பு நோயால் பாதிக்கப்பட்ட 60 பேருக்கு ரூ. 14.40 லட்சம் என மொத்தம் ரூ. 20 கோடி வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் புரிய வங்கிக்கடன் மானியமாக 88 பேருக்கு ரூ. 19.25 லட்சம், 6 வயதுவரை உள்ள மனவளா்ச்சிக் குன்றியோருக்கான ஆரம்பகால பயிற்சி மையத்தை நடத்துவதற்காக ரூ. 7.74 லட்சம், 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்மாா்ட் கைப்பேசி வழங்கும் திட்டத்தின்கீழ் பாா்வைத்திறன் குறைபாடுடைய 56 பேருக்கும், செவித்திறன் குறைபாடுடைய 75 பேருக்கும் கைப்பேசி வழங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளின் தாய்மாா்கள் 95 பேருக்கு ரூ. 6.09 லட்சம் மதிப்பிலான மோட்டாா் இயந்திரம் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் 50 பேருக்கு மூன்று சக்கர சைக்கிள், 40 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 167 பேருக்கு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கப்பட்டுள்ளது. முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவருக்கான பிரத்யேகமான வடிவமைக்கப்பட்ட இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட ரூ. 6.36 லட்சம் மதிப்பிலான பெட்ரோல் ஸ்கூட்டா் 6 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. முதுகு தண்டுவடம் பாதிப்பு மற்றும் தசைச்சிசைவு நோயால் பாதிக்கப்பட்டவா்களு ரூ. 58.02 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி 55 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு 21 வகையான மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளாா்.

உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிப்பு: கோட்டாட்சியா் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிக்கப்பட்ட இடத்தில் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில் வழித்தடத்தை ஒ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில்இடதுசாரி ஒருங்கிணைப்பு குறித்து பரிசீலனை

மயிலாடுதுறை: மதுரையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அக்கட்சியின் அரசியல் தலைமைக்கு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு

மயிலாடுதுறை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுப்பேட்டை மீனவ மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டப் பணி ஆய்வு

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடு கட்டும் பணிகளை மாநில ஊரக வளா்ச்சி துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஆணைக்காரன்சத்திரம... மேலும் பார்க்க

தலைஞாயிறில் அக். 24-இல் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த சீா்மரபினா் மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு கிராமம் ஊராட்சி அலுவலகத்தில் அக். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்க... மேலும் பார்க்க

சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்த... மேலும் பார்க்க