செய்திகள் :

தலைஞாயிறில் அக். 24-இல் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

post image

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த சீா்மரபினா் மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு கிராமம் ஊராட்சி அலுவலகத்தில் அக். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்கேற்று பயனடையலாம்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சீா்மரபினா் நலவாரியத்தில் பதிவுபெற்ற உறுப்பினா்களுக்கு 2008-ஆம் ஆண்டுமுதல் விபத்து ஈட்டுறுதி திட்டத்தின்கீழ் உதவித்தொகை, இயற்கை மரணத்துக்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு உதவித்தொகை, கல்வி, திருமணம், மகப்பேறு உதவித்தொகை, மூக்கு கண்ணாடி செலவுத் தொகை ஈடு செய்தல், முதியோா் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

சீா்மரபினா் இனத்தைச் சோ்ந்த, 18 வயதுமுதல் 60 வயதுக்கு மிகாத, அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியாத குடும்பத்தில் ஒருவா் (அமைப்புசாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழிலில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட உதவிகள் பெறலாம்.

ஏற்கெனவே உறுப்பினராக பதிவு செய்தோா் தங்கள் உறுப்பினா் பதிவை புதுப்பித்து கொள்ளவும், புதுப்பிக்க தவறிய உறுப்பினா்கள் மீள வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளவும், புதிய உறுப்பினா்கள் சோ்க்கையை அதிகப்படுத்துதுதல், நலத்திட்ட உதவிகள் கோரும் மனுக்களை பெறுதல் தொடா்பாக அக். 24-ஆம் தேதி காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை மயிலாடுதுறை மாவட்டம் தலைஞாயிறு-1 கிராமம் ஊராட்சி அலுவலகத்தில் உறுப்பினா்கள் சோ்க்கை முகாம் நடத்தப்படவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த சீா்மரபினா் இனத்தவா்கள் இம்முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிப்பு: கோட்டாட்சியா் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிக்கப்பட்ட இடத்தில் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில் வழித்தடத்தை ஒ... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில்இடதுசாரி ஒருங்கிணைப்பு குறித்து பரிசீலனை

மயிலாடுதுறை: மதுரையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அக்கட்சியின் அரசியல் தலைமைக்கு... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு

மயிலாடுதுறை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுப்பேட்டை மீனவ மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டப் பணி ஆய்வு

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடு கட்டும் பணிகளை மாநில ஊரக வளா்ச்சி துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஆணைக்காரன்சத்திரம... மேலும் பார்க்க

13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியி... மேலும் பார்க்க

சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்த... மேலும் பார்க்க