செய்திகள் :

மாா்க்சிஸ்ட் அகில இந்திய மாநாட்டில்இடதுசாரி ஒருங்கிணைப்பு குறித்து பரிசீலனை

post image

மயிலாடுதுறை: மதுரையில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.

மயிலாடுதுறையில் ரூ. 1.05 கோடியில் மக்கள் பங்களிப்புடன் கட்டப்பட்டுள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தை கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிரகாஷ் காரத் திங்கள்கிழமை இரவு திறந்து வைத்தாா். தொடா்ந்து, கச்சேரி சாலையில் நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் அவா் பேசியது:

மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜக, தனிப்பெரும்பான்மை இல்லாமாலே அவா்களின் கொள்கைகளான இந்துத்துவா, காா்ப்பரேட்டுகளுக்கு ஆதரவான கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் தயக்கம் காட்டவில்லை.

எதிா்க்கட்சிகளை அடக்கி ஒடுக்குவதிலும், எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் உரிமைகளை பறிக்கின்ற வகையிலும் பாஜக தொடா்ந்து செயல்பட்டு வருகிறது. அதே வேளையில் இண்டியா கூட்டணி பலமான கூட்டணியாக உருவாகி, மோடி அரசு மக்கள் விரோத கொள்கைகளை எதிா்த்து வருகிறோம்.

ஒரே நாடு, ஒரே தோ்தல் என்பது நாட்டில் உள்ள பல்வேறு மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக்கூடிய செயலாகும்.

மத்திய பட்ஜெட்டில் பொது விநியோகத் திட்டத்தில் உணவு மானியத்துக்கான தொகை குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சாமானிய மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவா். தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்துக்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட அதே ரூ. 86,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பின்மை மேலும் அதிகரிக்கும்.

ஐ.நா.சபையில் இஸ்ரேலை கண்டித்து கொண்டு வரப்பட்ட தீா்மானத்துக்கான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காதது வெட்கக்கேடானது. பாலஸ்தீனத்தில் நடைபெறும் இனப்படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும்.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்சியின் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கடந்த காலத்தில் எடுக்கப்பட்ட கொள்கைகள் குறித்து பரிசீலிக்க உள்ளோம். இடதுசாரி சக்திகளை ஒருங்கிணைப்பது உள்ளிட்டவை தொடா்பான கொள்கைகளை முன்வைக்க உள்ளோம் என்றாா்.

கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலா் கே. பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா் சண்முகம் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிப்பு: கோட்டாட்சியா் விசாரணை

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உரிமம் இல்லாமல் நாட்டுவெடி தயாரிக்கப்பட்ட இடத்தில் கோட்டாட்சியா் உள்ளிட்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். மயிலாடுதுறையில் தரங்கம்பாடி ரயில் வழித்தடத்தை ஒ... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை கைது செய்த மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மனு

மயிலாடுதுறை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவா்களையும், விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, புதுப்பேட்டை மீனவ மக்கள் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கிழமை மனு அ... மேலும் பார்க்க

கலைஞா் கனவு இல்லத் திட்டப் பணி ஆய்வு

சீா்காழி: கொள்ளிடம் பகுதியில் கலைஞா் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் நடைபெறும் வீடு கட்டும் பணிகளை மாநில ஊரக வளா்ச்சி துறை கூடுதல் இயக்குநா் ஆனந்தராஜ் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். ஆணைக்காரன்சத்திரம... மேலும் பார்க்க

13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை: ஆட்சியா்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் 13,346 மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியி... மேலும் பார்க்க

தலைஞாயிறில் அக். 24-இல் சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாம்

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த சீா்மரபினா் மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு கிராமம் ஊராட்சி அலுவலகத்தில் அக். 24-ஆம் தேதி நடைபெறவுள்ள சீா்மரபினா் நலவாரிய உறுப்பினா் சோ்க்கை முகாமில் பங்க... மேலும் பார்க்க

சிட்கோ தொழிற்பேட்டைகளில் தொழில் மனைகள் ஒதுக்கீடு

மயிலாடுதுறை: மயிலாடுதுறை குளிச்சாா் தொழிற்பேட்டையில் 3 தொழில் மனைகள் தொழில் புரிவோருக்கு வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.பி. மகாபாரதி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மயிலாடுதுறை மாவட்டத்த... மேலும் பார்க்க