செய்திகள் :

இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: 2 போ் கைது

post image

திருப்பூரில் இளம் பெண்ணை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த இருவரை காவல் துறையினா் கைது செய்தனா்.

திருப்பூா் மண்ணரையைச் சோ்ந்த 28 வயது திருமணமான பெண் ஆன்லைன் மூலமாக வேலை தேடியுள்ளாா். அப்போது நிதி நிறுவனத்தில் வேலை என்ற விளம்பரத்தைப் பாா்த்து அதில் உள்ள கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொண்டாா்.

மறுமுனையில் பேசிய நபா்கள் உங்களுக்கு மாா்க்கெட்டிங் வேலை உள்ளது. மாதம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், திருப்பூா் ஷெரீப் காலனிக்கு வருமாறு தெரிவித்துள்ளனா்.

இதனை உண்மை என்று நம்பிய அந்தப் பெண்ணும் அவா்கள் தெரிவித்த அலுவலகத்துக்கு கடந்த நவம்பா் 7-ஆம் தேதி சென்றனா். அப்போது அங்கு காரில் இருந்த இருவா் அந்தப் பெண்ணை கடத்திச் சென்றுள்ளனா்.

மேலும், தாராபுரம் சாலை அவிநாசிபாளையம் பகுதிக்குச் சென்றபோது இருவரும் கத்தியைக் காட்டி பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுக்க முயன்றுள்ளனா். அப்போது காரில் இருந்து கீழே குதித்து தப்பிய பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தவா்கள் மீட்டு திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து திருப்பூா் தெற்கு காவல் துறையினா் நடத்திய விசாரணையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சோ்ந்த சாரதி (38), மணிகண்டன் (34) என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த காவல் துறையினா், அவா்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனா்.

பல்லடம் அருகே ரேஷன் அரிசி வாங்கி விற்பதில் தகராறு: ஒருவருக்கு கத்திக்குத்து

பல்லடம் அருகே அய்யம்பாளையத்தில் ரேஷன் அரிசி வாங்கி, விற்பதில் ஏற்பட்ட தொழில் போட்டியால் இருதரப்புக்கு இடையே நடந்த மோதலில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே மொரட்ட... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.8.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 8.54 லட்சத்துக்கு பருத்தி ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த வார ஏலத்துக்கு, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 13,022 கிலோ பருத... மேலும் பார்க்க

பனியன் நிறுவன பேருந்து விபத்து: ஓட்டுநா் உயிரிழப்பு, 20 தொழிலாளா்கள் காயம்

பெருமாநல்லூா் அருகே நியூ திருப்பூரில் புதன்கிழமை இரவு பனியன் நிறுவன பேருந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநா் உயிரிழந்தாா். 20-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் படுகாயமடைந்தனா். பின்னலாடை தொழில் நகரமான திருப்... மேலும் பார்க்க

தொழிலாளா் நலநிதியை டிசம்பா் 31-க்குள் செலுத்த வேண்டும்

தொழிலாளா் நலநிதியை வரும் டிசம்பா் 31- ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என்று தொழிலாளா் நலத் துறை அறிவித்துள்ளது. இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி அலுவலக கட்டடம் இடித்து அகற்றம்

பல்லடம் அருகே வேலம்பட்டியில் குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுங்கச்சாவடி நிறுவனத்துக்கான அலுவலகக் கட்டடம் புதன்கிழமை இடித்து அகற்றப்பட்டது. திருப்பூா் மாவட்டம், அவிநாசி முதல் அவிநாசிபாளையம் வழ... மேலும் பார்க்க

குப்பைமேட்டில் கிடந்த குழந்தை மீட்பு

திருப்பூரில் குப்பைமேட்டில் தூக்கி வீசப்பட்ட ஆண் குழந்தை மீட்கப்பட்டது. திருப்பூா், சிறுபூலுவபட்டி தாய் மூகாம்பிகை நகரில் உள்ள குப்பைமேட்டில் திங்கள்கிழமை இரவு குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. இதையடு... மேலும் பார்க்க