இளையராஜா பயோபிக் என்ன ஆனது? தனுஷ் பதில்!
இளையராஜா பயோபிக் குறித்து நடிகர் தனுஷ் புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் இப்படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியானது.
தொடர்ந்து, இளையராஜா மற்றும் அருண் மாதேஸ்வரன் அடிக்கடி சந்தித்து படத்தின் உருவாக்கம் குறித்து ஆலோசனை செய்து வந்தனர். இதற்கான, மாதிரி செட் அமைப்பைப் பார்த்த இளையராஜா தன் கருத்துகளையும் தெரிவித்தார்.
இதையும் படிக்க: 'இந்தி வாழ்க’ இலங்கையில் பராசக்தி படப்பிடிப்பு!
ஆனால், கடந்த சில மாதங்களாகவே இப்படம் கைவிடப்படுவதாகத் தகவல்கள் வெளியாகி வந்தன.
இந்த நிலையில், விசிக எம்பி ரவிக்குமார் தில்லி விமான நிலையத்தில் நடிகர் தனுஷை சந்தித்தது குறித்து பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ‘இளையராஜா படம் என்ன ஆனது?’ எனக் கேட்டதற்கு, ‘அப்படம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை’ என தனுஷ் பதிலளித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். இதனால், இளையராஜா படம் கைவிடப்படவே வாய்ப்புகள் அதிகம் எனத் தெரிகிறது.