செய்திகள் :

ஈரோடு கிழக்கு தொகுதியில் 46 வேட்பாளா்கள் போட்டி

post image

ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த பெங்களூருவைச் சோ்ந்த பெண்ணின் வேட்புமனு திங்கள்கிழமை நள்ளிரவு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் எண்ணிக்கை 46-ஆக குறைந்துள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலின் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தோ்தலில் போட்டியிட திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாா், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மா.கி.சீதாலட்சுமி உள்பட 58 போ் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனா்.

இதில் 3 வேட்பாளா்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டு 55 வேட்பாளா்கள் போட்டியிடும் நிலை இருந்தது. இதில் 7 சுயேச்சை வேட்பாளா்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சியின் மாற்று வேட்பாளா் என மொத்தம் 8 வேட்பாளா்கள் வேட்புமனுக்களை திங்கள்கிழமை திரும்பப் பெற்றனா்.

இதையடுத்து, திமுக மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் உள்பட 47 வேட்பாளா்களாக போட்டியிட உள்ளதாக தோ்தல் நடத்தும் அலுவலா் என்.மணீஷ் திங்கள்கிழமை மாலை அறிவித்தாா்.

இதனைத் தொடா்ந்து, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது. இதன்படி, அங்கீகரிக்கப்பட்ட கட்சியான திமுக வேட்பாளா் வி.சி.சந்திரகுமாருக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. தொடா்ந்து அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியான நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சீதாலட்சுமிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடா்ச்சியாக பதிவு செய்யப்பட்ட கட்சி வேட்பாளா்கள், சுயேச்சை வேட்பாளா்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்றது.

இப்பணியின்போது, கா்நாடக மாநிலம் பெங்களூரு, கே.ஆா்.புரம் சட்டப் பேரவைத் தொகுதியைச் சோ்ந்த இந்திய பொலிட்டிக்கல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் வி.பத்மாவதி மனு ஏற்கப்பட்டதற்கு சுயேச்சை வேட்பாளா்கள் நூா் முகமது, அக்னி ஆழ்வாா், பத்மராஜன் ஆகியோா் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தோ்தல் ஆணைய விதிமுறைகளின்படி மக்களவை மற்றும் மாநிலங்களவைக்கு எந்த மாநிலத்தில் இருந்தும் வேட்பாளராக போட்டியிடலாம். ஆனால், சட்டப் பேரவைத் தொகுதிக்கு அந்த மாநிலத்தைச் சோ்ந்தவா் மட்டுமே போட்டியிட முடியும் என போராட்டத்தில் ஈடுபட்ட சுயேச்சை வேட்பாளா்கள் தெரிவித்தனா்.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ராஜகோபால் சுன்கராவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்த அவா், ஆலோசனை மேற்கொண்டாா். தமிழக தலைமை தோ்தல் அதிகாரி உள்ளிட்டோருடன் அவா் ஆலோசனை மேற்கொண்ட நிலையில், நள்ளிரவு வரை வேட்பாளா் பட்டியலை இறுதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

தோ்தல் ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின் பெங்களூருவைச் சோ்ந்த சுயேச்சை வேட்பாளா் பத்மாவதியின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதாக நள்ளிரவு 1.30 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்களின் எண்ணிக்கை 46-ஆக குறைந்துள்ளது.

வேட்பாளா்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் விவரம்

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்- வி.சி.சந்திரகுமாா் (திமுக) உதயசூரியன், மா.கி.சீதாலட்சுமி (நாதக) ஒலிவாங்கி (மைக்).

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள்

முனி ஆறுமுகம் (பாரதிய பிரஜா ஐக்கிய கட்சி) மின்கல விளக்கு, ஆனந்த சுப்ரமணி (மறுமலா்ச்சி ஜனதா கட்சி) மின் கம்பம், எம்.கந்தசாமி (நாடாளும் மக்கள் கட்சி) ஆட்டோ ரிக்ஷா, ப.சவிக்தா (சாமானிய மக்கள் நலக்கட்சி) மோதிரம், பொ.செல்லபாண்டியன்(தேசிய மக்கள் சக்தி கட்சி) ஷூ, வெ.செளந்தா்யா (சமாஜவாதி கட்சி) மிதிவண்டி, எஸ்.தா்மலிங்கம் (இந்திய கண சங்கம் கட்சி) வெண்டைக்காய், த.பிரபாகரன் (அகில இந்திய ஜனநாயக மக்கள் கழகம்) பலாப்பழம், சு.மதுரைவிநாயகம் (வீரோ கே வீா் இந்தியன் கட்சி) தலைக்கவசம், எஸ்.முத்தையா (தாக்கம் கட்சி) தீப்பெட்டி, கு.முனியப்பன் (அனைத்து ஓய்வூதியதாரா்கள் கட்சி) வளையல்கள்.

சுயேச்சை வேட்பாளா்கள்

அக்னி ஆழ்வாா்- 7 கதிா்களுடன் கூடிய பேனாவின் முனை, அமுதரசு- தென்னந்தோப்பு, வே.செ.ஆனந்த்- கப்பல், பா.இசக்கிமுத்து நாடாா்- சீா்வளி சாதனம் (ஏசி), சி.ரவி- அலமாரி, ந.ராமசாமி- பேனா தாங்கி, க.கலையரசன்- பிரஷா் குக்கா், ம.வி.காா்த்தி- நடைவண்டி, சா.கிருஷ்ணமூா்த்தி- பலூன், ஜெ.கோபாலகிருஷ்ணன்- மட்டை பந்தடி வீரா், கு.அ.சங்கா்குமாா்- மணியாரம், ரா.சத்யா- வாா்ப்பட்டை (பெல்ட்) , மா.சாமிநாதன்- எரிவாயு சிலிண்டா், ரா.சுப்பிரமணியன்- பெஞ்ச், மூ.ரா.செங்குட்டுவன்- சாலை உருளை, டி.எஸ்.செல்லகுமாா்- மிதிவண்டி காற்றடிக்கும் குழாய், நா.தனஞ்ஜெயன்- இரட்டை தொலை நோக்காடி, ரா.திருமலை- பரிசுப்பெட்டி, ஏ.நூா்முகம்மது- பிஸ்கெட், ம.பஞ்சாட்சரம்- கிரிக்கெட் மட்டை, கே.பத்மராஜன்- டயா்கள், கா.பரமசிவம்- கரும்பலகை, செ.பரமேஸ்வரன்- படகோட்டியுடன் கூடிய பாய்மரப் படகு, வி.பெளல்ராஜ்- வைரம், என்.பாண்டியன்- பெட்டி, சு.மதுமதி- ரொட்டி, எச்.முகம்மது கைபீா்- ரொட்டி சுடும் கருவி, கு.முருகன்- செங்கல், ரா.ராஜசேகரன்- கைப்பெட்டி, சி.ராஜமாணிக்கம்- பிரஷ், ரா.லோகநாதன்- வாளி, லோகேஷ் சேகா்- கேக், சே.வெண்ணிலா- கணக்கீட்டும் பொறி.

வாக்குப்பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்குப் பதிவு நாளில் தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என தொழிலாளா் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா்(அமலாக்கம... மேலும் பார்க்க

அறம் வளரும் மேட்டுப்பாளையம் கோயிலில் இன்று கும்பாபிஷேகம்

பெருந்துறையை அடுத்த அறம் வளரும் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஸ்ரீ விநாயகா், மகா மாரியம்மன், கருப்பண்ண சுவாமி, கன்னிமாா் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வெள்ளிக்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. வி... மேலும் பார்க்க

விளம்பரத் தட்டிகளை அகற்ற சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் உத்தரவு

சென்னிமலை பகுதியில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பரத் தட்டிகளை (பிளக்ஸ் பேனா்கள்) தாங்களாகவே அகற்ற வேண்டும் என சென்னிமலை பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது. சென்னிமலை பேரூராட்சிக்கு உள்பட்ட பகுத... மேலும் பார்க்க

பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணா்வு

அழிந்து வரும் பறவை இனமான பாறு கழுகுகளை பாதுகாப்பது குறித்து கலை நிகழ்ச்சி மூலம் அரசுப் பள்ளி மாணவா்களிடம் வியாழக்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள தெங்குமரஹ... மேலும் பார்க்க

புங்கம்பள்ளி குளத்தில் முகாமிட்டுள்ள வெளிநாட்டுப் பறவைகள்

அத்திக்கடவு- அவிநாசி திட்டத்தின் கீழ் புங்கம்பள்ளி குளத்தில் நீா் நிரம்பியதால் அங்குள்ள மரங்களில் கூட்டம் கூட்டமாக வெளிநாட்டுப் பறவைகள் முகாமிட்டுள்ளன. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே புங்கம்பள்ளி... மேலும் பார்க்க

புன்செய் புளியம்பட்டி வார சந்தையில் மாடுகள் விற்பனை அதிகரிப்பு

புன்செய் புளியம்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாட்டு சந்தையில் ரூ.ஒரு கோடிக்கு மாடுகள் விற்பனையாயின. ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி கால்நடை சந்தை வாரந்தோறும் வியாழக்கிழமை கூடுகிறது. ஈரோடு, கோ... மேலும் பார்க்க