செய்திகள் :

ஊட்டி: வகுப்பறையில் தற்கொலைக்கு முயன்ற பள்ளி மாணவி; தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்; நடந்தது என்ன?

post image

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகில் உள்ள கிராமம் ஒன்றில் அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பாட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று (அக்டோபர் 25) மதிய உணவு இடைவேளையின் போது 9-ம் வகுப்பு அறை உள்பக்கமாகத் தாழிடப்பட்டிருப்பதைத் கண்டு குழப்பமடைந்த மாணவர்கள், அதை ஆசிரியர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். வகுப்பறையின்‌ கதவைத் திறந்து உள்ளே ஆசிரியர்கள் நுழைந்துள்ளனர். மாணவி ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீப்பற்ற வைக்க முயற்சி செய்து கொண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். உடனடியாக அந்த மாணவி மீது தண்ணீரை ஊற்றி தடுத்துள்ளனர். விபரீத முடிவை எடுத்த மாணவியின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

Prevent Suicide

ஆசிரியர்கள் சொல்வதென்ன?

இந்த பின்னணி குறித்து தெரிவித்த ஆசிரியர்கள், "9 -ம்‌ வகுப்பு படிக்கும் இந்த மாணவி பல பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை. மிகவும் குறைவான மதிப்பெண் எடுத்திருக்கிறார். பெற்றோரும் ஆசிரியர்களும் கண்டித்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற இருந்தது. அதனால், மாணவியின் தந்தையை வரச்சொல்லியிருந்தோம். அதற்குப் பயந்து புத்தகப் பையில் மண்ணெண்ணெய்யை பாட்டிலில் கொண்டுவந்து இப்படி ஒரு மோசமான முடிவை எடுத்திருக்கிறார். மாணவிக்கு உரிய கவுன்சிலிங் வழங்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

பாபா சித்திக் கொலை: பாகிஸ்தானிலிருந்து ட்ரோன் மூலம் துப்பாக்கிகள் வந்தனவா? காவல்துறை தீவிர விசாரணை

மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாநில முன்னாள் அமைச்சர் பாபா சித்திக், கடந்த 12ம் தேதி அவரது மகனின் அலுவலகத்திற்கு வெளியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.நடிகர் சல்மான் கானுடன் நெருக்கமா... மேலும் பார்க்க

கொடநாடு வழக்கு: தலைமறைவான அதிமுக நிர்வாகி சஜீவன் ஆஜராக சிபிசிஐடி சம்மன்; காவல்துறை சொல்வதென்ன?

கொடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை கொள்ளை தொடர்பான வழக்கு விசாரணை அடுத்தடுத்து பல்வேறு மாற்றங்களைக் கண்டு வரும் நிலையில், தற்போது சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்... மேலும் பார்க்க

சென்னை: இளம்பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை - சஸ்பெண்ட் காவலர் சிக்கிய பின்னணி

தென்சென்னையைச் சேர்ந்த ராணி (பெயர் மாற்றம்) என்ற இளம்பெண், ஸ்பா ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 17.10.2024-ம் தேதி தன்னுடைய கணவருடன் வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். வரும் வழியில் ... மேலும் பார்க்க

சென்னை: நைஜீரிய நெட்வொர்க்குடன் தொடர்பு; போதைப்பொருள் வழக்கில் முன்னாள் டிஜிபி மகன் கைது!

போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளை சென்னைப் போலீஸார் எடுத்து வருகிறார்கள். இதுதொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னை நந்தம்பாக்கத்தில் கொக்கைன்... மேலும் பார்க்க

சென்னை: 5,230 நோட் பேடுகளுடன் கன்டெய்னர் கடத்தல்; கோடீஸ்வரனாக ஆசைப்பட்ட பட்டதாரியின் மாஸ்டர் பிளான்!

சீனாவிலிருந்து சரக்கு கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு கடந்த மாதம் கன்டெய்னரில் 34 கோடி ரூபாய் மதிப்பிலான note pad கொண்டு வரப்பட்டது. நோட் பேடு வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் துறைமுகத்தில் உள்ள சென்ன... மேலும் பார்க்க

கணவன் கொலையில் சிக்கிய மனைவி; உடந்தையாக இருந்த விசிக நிர்வாகியும் திடீர் தற்கொலை - நடந்தது என்ன?!

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகேயுள்ள கல்யாணபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர். இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில், ஆரணி அடுத்துள்ள பையூர் கிரா... மேலும் பார்க்க