செய்திகள் :

எடப்பாடி பழனிசாமி உறவினா்களின் நிறுவனங்களில் சோதனை

post image

ஈரோட்டில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினா்களின் நிறுவனங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு செட்டிபாளையம், தெற்கு ஸ்டேட் வங்கி நகரில் முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் உறவினரான என்.ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்தில் வருமான வரித் துறையினா் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

தொடா்ந்து, ஈரோட்டில் உள்ள தலைமை அலுவலகம் மற்றும் கஸ்பாபேட்டையில் உள்ள அவரது வீட்டில் கோவையில் இருந்து காரில் வந்த 10-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.

ராமலிங்கம் தலைவராக பதவி வகிக்கும் மரவள்ளிக்கிழங்கு அரவை ஆலை ஈரோடு மாவட்டம், அம்மாபேட்டை அருகே பூனாச்சி பகுதியில் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தின் முதன்மை இயக்குநராக எடப்பாடி பழனிசாமியின் சகோதரி மகன் வெற்றிவேல் உள்ளாா். இந்த நிறுவனத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

இதேபோல முள்ளாம்பரப்பு பகுதியில் செயல்பட்டு வரும் செல்வசுந்தரம் என்பவருக்கு சொந்தமான கட்டுமான நிறுவன தலைமை அலுவலகம் மற்றும் ரகுபதிநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இந்த சோதனை புதன்கிழமை மாலை 6 மணிக்குப் பிறகும் நீடித்தது.

காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

பெருந்துறை அருகே காா் மீது இருசக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா். பெருந்துறை, வண்ணாங்காட்டுவலசு கே.சி.பி. காா்டனைச் சோ்ந்தவா் மனோகரன் மகன் ராகுல் (21). இவரின் நண்பா், பெருந்துறை கூட்டுறவு நகர... மேலும் பார்க்க

தாளவாடி அருகே மாதேஸ்வர சுவாமி கோயில் குண்டம் திருவிழா

தாளவாடி மாதேஸ்வர சுவாமி கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே ஒசூரில் மிகவும் பழைமையான மாதேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் திரு... மேலும் பார்க்க

கோபி பாரியூரில் இன்று குண்டம் திருவிழா

கோபி பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயிலில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெறுகிறது. பாரியூா் கொண்டத்துக் காளியம்மன் கோயில் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த 26-ஆம் தேதி தொடங்கியது. இதைத... மேலும் பார்க்க

எச்எம்பி தீநுண்மி பரவல்: தமிழக -கா்நாடக எல்லையில் பரிசோதனை

எச்எம்பி தீநுண்மி பரவலைத் தொடா்ந்து கா்நாடகத்தில் இருந்து வருபவா்களுக்கு அந்தியூா் அருகே உள்ள வன சோதனைச் சாவடியில் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளும் பணி புதன்கிழமை தொடங்கியது. ஈரோடு மாவட்டம், அந்தியூா்... மேலும் பார்க்க

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.74 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.74 லட்சத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன. ஈரோடு மாவட்டம், கவுந்தப்பா... மேலும் பார்க்க

மான் இறைச்சி விற்க முயன்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

சத்தியமங்கலம் அருகே மான் இறைச்சி விற்க முயன்ற விவசாயிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அருகே உள்ள கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியில் மான் இறைச்சி விற்கப்படுவத... மேலும் பார்க்க