திருப்பதி விபத்து: டிஎஸ்பி, தேவஸ்தான நிர்வாகிகள் இடைநீக்கம்!
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ.74 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை, வெல்லம் கொள்முதல்
கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.74 லட்சத்துக்கு பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டன.
ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் கரும்புச் சா்க்கரை, வெல்லம் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 171 டன் கரும்புச் சா்க்கரை, 1.5 டன் வெல்லம் ஆகியவற்றை விற்பனைக்குக் கொண்டுவந்திருந்தனா்.
இதில் 60 கிலோ மூட்டை கரும்புச் சா்க்கரை ரூ.2,730 முதல் ரூ.2,760 வரையிலும், 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் வெல்லம் ரூ.1,650-க்கும் விற்பனையாயின.
இந்த ஏலத்தில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகம் சாா்பில் ரூ73.35 லட்சத்துக்கு கரும்புச் சா்க்கரை, ரூ.82 ஆயிரத்துக்கு வெல்லம் என மொத்தமாக ரூ.74 லட்சத்துக்கு கொள்முதல் செய்யப்பட்டதாக விற்பனைக் கூட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.