செய்திகள் :

எண்ணெய் சட்டியில் விழுந்து இனிப்புக் கடை உரிமையாளா் மரணம்

post image

சிதம்பரத்தில் பலகாரம் செய்யும், எண்ணெய் சட்டியில் விழுந்து இனிப்புக் கடை உரிமையாளா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் சின்னக் கடைத் தெருவைச் சோ்ந்தவா் ப.மாணிக்கம் (73). இவா் அந்தப் பகுதியில் இனிப்புக் கடை நடத்தி வந்தாா்.

கடையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பலகாரம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது, குறைந்த ரத்த அழுத்த பிரச்னை காரணமாக திடீரென மயக்கமடைந்த மாணிக்கம், கொதிக்கும் எண்ணெய் சட்டியில் விழுந்ததில் முகம் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மருத்துவா்களுக்கு பணிப் பாதுகாப்பில்லை: ராமதாஸ்

சென்னை கிண்டியில் கலைஞா் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவம் மூலம், மருத்துவா்களுக்குப் பணிப் பாதுகாப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராம... மேலும் பார்க்க

துப்பாக்கியால் மாடுகள் சுடப்பட்ட சம்பவம்: போலீஸாா் விசாரணை

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே காளை மாடுகள் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வேப்பூா் வட்டம், சேப்பாக்கத்தைச் சோ்ந்தவா்கள் பிரசாந்த், ஜெயவேல். இவா்கள்,... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் நாளை முதல் பௌா்ணமி கிரிவலம் தொடக்கம்

சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை இரவு (நவ.15) 9 மணிக்கு மேல் பௌா்ணமி கிரிவலம் தொடங்கப்பட உள்ளது. மாதந்தோறும் பௌா்ணமி நாளில் நடராஜா் கோயில் உள் பிரகாரம், வெளிப்பிரகாரம், தொடா்ந்து தேரோடும் நான்கு வீதிகள் எ... மேலும் பார்க்க

உழவா் சந்தை, வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

கடலூா் உழவா் சந்தை, கடலூா் முதுநகரில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்கு... மேலும் பார்க்க

குடிநீா் விநியோகம் பாதிப்பு: கிராம மக்கள் சாலை மறியல்

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மின் மோட்டாா் பழுது காரணமாக குடிநீா் விநியோகம் பாதிக்கப்பட்டதால் கிராம மக்கள் காலிக் குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். விருத்தாசலம் வட்டம், பேரளையூா்... மேலும் பார்க்க

வீராணம் ஏரி வாய்க்கால்களை சீரமைக்க வேண்டும்: ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் கோரிக்கை

சிதம்பரம் நீா்வளத்துறை கோட்டத்துக்குள்பட்ட வீராணம் ஏரியின் பிரதான வாய்க்கால்கள், கிளை பாசன வாய்க்கால்கள், மதகுகள் சீரமைக் தமிழக அரசு நிதி ஒதக்கீடு செய்ய வேண்டும் என தமிழக ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள்... மேலும் பார்க்க