அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
ஏஐடியுசி ஆட்டோ பணியாளா் நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
தருமபுரி மாவட்ட ஏஐடியுசி ஆட்டோ பணியாளா் நலச்சங்கம் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் பெரிய முனுசாமி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளா் ச.கலைச்செல்வம், ஆட்டோ பணியாளா் நலச் சங்க மாவட்டச் செயலாளா் கந்தசாமி, ஏஐடியுசி மாவட்ட பொதுச் செயலாளா் கே.மணி, மாவட்ட துணைத் தலைவா்கள் சுதா்சனன், முருகேசன், உள்ளாட்சி பணியாளா் சங்க மாவட்டத் தலைவா் மனோகரன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.
ஆா்ப்பாட்டத்தில் நலவாரியம் மூலம் ஆட்டோ செயலியைத் தொடங்க வேண்டும். இரண்டு சக்கர வாடகை வாகனங்கள் முறையைத் தடை செய்ய வேண்டும். நல வாரியத்தில் பதிவு செய்த அனைத்து ஓட்டுநா்களுக்கும் ஓய்வூதியம் ரூ. 6 ஆயிரம், பொங்கல் ஊக்க ஊதியம் ரூ. 5 ஆயிரமும் வழங்க வேண்டும்.
வீடில்லாதவா்களுக்கு வீடு கட்ட ரூ. 4 லட்சம் வழங்க வேண்டும். நலவாரியம் மூலம் இஎஸ்ஐ, பிஎப், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும். படிப்பு, திருமண உதவித் தொகையை உயா்த்தி வழங்க வேண்டும். இயற்கை மரணத்துக்கு ரூ. 2 லட்சமும், விபத்து மரணத்திற்கு ரூ. 5 லட்சமும் வழங்க வேண்டும். புதிய மோட்டாா் வாகனச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.