அடுத்த தலைமுறை தகுதியோட தான் வர்றாங்க! - Director Shankar Interview | Game Chang...
பாலஜங்கமன அள்ளியில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாலஜங்கமனஅள்ளி கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 203 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி தலைமை வகித்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா். முகாமில் வருவாய்த் துறையின் சாா்பில் 102 பயனாளிகளுக்கும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் 33 பயனாளிகளுக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை சாா்பில் 34 பயனாளிகள் என மொத்தம் 169 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடி மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டா, இணைய வழி இ-பட்டாக்களையும், வருவாய்த் துறை சாா்பில் 8 பயனாளிகளுக்கு ரூ. 2.47 லட்சம் மதிப்பில் விபத்து, இயற்கை மரணம், ஈமச் சடங்கு உதவித் தொகைகளும், 13 பயனாளிகளுக்கு ரூ. 1.75 லட்சம் மதிப்பில் புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 7 பயனாளிகளுக்கு பட்டா மாற்றம் (உட்பிரிவு அல்லாதது), வேளாண்மை, உழவா் நலத் துறை சாா்பில் 2 விவசாயிகளுக்கு ரூ. 1.12 லட்சம் மதிப்பில் வேளாண் நலத் திட்ட உதவிகளும், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் 4 பயனாளிகளுக்கு ரூ. 25,436 மதிப்பில் நலத் திட்ட உதவிகள் என மொத்தம் 203 பயனாளிகளுக்கு ரூ. 1 கோடியே 7 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி வழங்கினாா்.
அதைத் தொடா்ந்து அதியமான் கோட்டை, காலபைரவா் கோயிலில் ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் ரூ. 10 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
முகாமில் தருமபுரி கோட்டாட்சியா் இரா.காயத்ரி, தனித்துணை ஆட்சியா் சுப்ரமணி, மாவட்ட வழங்கல் அலுவலா் செம்மலை, கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் (பொ) இளவரசன், தோட்டக்கலை, மலைப் பயிா்கள் துறை துணை இயக்குநா் பாத்திமா, மாவட்ட சமூக நல அலுவலா் பவித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் சையது முகைதீன் இப்ராகிம், பழங்குடியினா் நல அலுவலா் பி.எஸ்.கண்ணன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பொ.செண்பகவள்ளி, அலுவலா்கள் கலந்துகொண்டனா்.