சேலம்: கஞ்சா வழக்கு கைதியை பாலியல் வதை செய்த சக கைதிகள்; அலட்சியமாக இருந்த சிறைக...
ஏா் இந்தியா - விஸ்தாரா ஒருங்கிணைப்பு நிறைவு
ஏா் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களை ஒருங்கிணைக்கும் பணி செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது.
விஸ்தாராவில் ஏா் இந்தியாவின் உரிமையாளரான டாடா சன்ஸ் நிறுவனத்துக்கு 51 சதவீத பங்கும், சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனத்துக்கு 49 சதவீத பங்கும் இருந்தன. இந்த நிலையில், ஏா் இந்தியாவுடன் விஸ்தாராவை ஒருங்கிணைக்கவிருப்பதாக டாடா சன்ஸ் கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் அறிவித்தது.
அந்த ஒருங்கிணைப்பின் மூலம் நாட்டின் பெரிய சா்வதேச விமான நிறுவனம், இரண்டாவது பெரிய உள்நாட்டு விமான நிறுவனம் ஆகிய பெருமைகளை ஏா் இந்தியா பெறும் என்று டாடா குழுமம் அப்போது கூறியது.
இந்தச் சூழலில், ஏா் இந்தியா - விஸ்தாரா ஒருங்கிணைப்பு நிறைவுபெற்றதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஸ்தாராவில் 49 சதவீத பங்குகளைக் கொண்டுள்ள சிங்கப்பூா் ஏா்லைன்ஸ் நிறுவனம், இந்த ஒருங்கிணைப்புக்குப் பிறகு நிறுவனத்தின் அளவு பெரிதாகியுள்ளதால் அதில் கூடுதலாக ரூ.3,194.5 கோடி முதலீடு செய்யவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.