செய்திகள் :

'ஓகே' என்று சொன்ன ஸ்டேஷன் மாஸ்டரால் ரூ.3 கோடி இழப்பு; விவகாரத்து வரை போன விவகாரம்; நடந்தது என்ன?

post image

விசாகபட்டினத்தைச் சேர்ந்த நாகஸ்வரராவ் என்பவர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டராக இருக்கிறார். இவருக்கு சத்தீஷ்கரில் உள்ள துர்க் என்ற நகரத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். கடந்த 2011ம் ஆண்டு இத்திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த சில நாட்களில் அவர்களுக்குள் பிரச்னை ஏற்பட்டது. அடிக்கடி சண்டை போட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவத்தன்று நாகேஸ்வரராவ் இரவு பணிக்குச் சென்று இருந்தார். அந்நேரம் அவரது மனைவிக்கு போன் செய்து பேசிக்கொண்டிருந்தார்.

நீதிமன்றம்

போனில் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதத்தின்போது, "பிரச்னையை வீட்டில் வைத்துப் பேசிக்கொள்ளலாம் ஓகே" என்று நாகேஸ்வரராவ் தனது மனைவியிடம் தெரிவித்தார். அந்நேரம் அவர் ரயில்வே அதிகாரிகளிடம் பேசக்கூடிய மைக்ரோபோன் ஆனில் இருந்தது. அதில் 'ஓகே' என்ற வார்த்தை எதிர்முனையிலிருந்த ரயில்வே ஊழியருக்குக் கேட்டுள்ளது. உடனே அந்த ஊழியர் காத்திருந்த ரயில் ஒன்றுக்கு கிரீன் சிக்னல் கொடுத்தார். இதனால் அந்த ரயில் நக்சலைட்களின் தாக்கம் இருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட வழித்தடத்திற்குள் சென்றது.

அதிர்ஷ்டவசமாக அந்த வழித்தடத்தில் ரயில் எந்த வித விபத்திலும் சிக்கவில்லை. ஆனால் தவறுதலான வழித்தடத்திற்கு ரயிலை இரவு நேரத்தில் அனுப்பி விதிமீறலில் ஈடுபட்டதால் ரயில்வேயிக்கு ரூ.3 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ரயில்வே நிர்வாகம் நாகேஸ்வரராவைப் பணியிலிருந்து இடைநீக்கம் செய்தது. இதனால் கோபத்தில் நாகேஸ்வரராவ் விசாகப்பட்டினம் நீதிமன்றத்தில் தனது மனைவியிடமிருந்து விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்தார். உடனே நாகேஸ்வரராவ், அவரது 70 வயது தந்தை, மூத்த சகோதரர், மைத்துனி ஆகியோர் மீது நாகேஸ்வரராவ் மனைவி தன்னைச் சித்ரவதை செய்வதாக காவல்துறையில் புகார் செய்தார். விசாகப்பட்டினத்தில் வழக்கு நடைபெறுவதால் தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்று கூறி விசாரணையை துர்க் நகரத்திற்கு மாற்ற வேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் அப்பெண் மனுத்தாக்கல் செய்தார்.

railway

அவரின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை துர்க்கிற்கு மாற்றி உத்தரவிட்டது. துர்க் நீதிமன்றம் ரயில்வே ஊழியரின் விவாகரத்து கோரிக்கை மனுவைத் தள்ளுபடி செய்தது. இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து சத்தீஷ்கர் உயர் நீதிமன்றத்தில் நாகேஸ்வரராவ் மேல் முறையீடு செய்தார். இம்மனு நீதிபதிகள் ரஞ்சனி துபே, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது தனது கணவருக்கு அவரது சகோதரரின் மனைவியுடன் தொடர்பு இருந்ததாக நாகேஸ்வரராவ் மனைவி தெரிவித்தார். அதோடு வரதட்சணை கேட்டுக் கொடுமைப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

ஆனால் இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று குறிப்பிட்ட நீதிபதிகள் நாகேஸ்வரராவிற்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டனர். போலியான மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கொடூரமானது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Adani: "இந்தியாவில் சோலார் மின் திட்டங்களைப் பெற லஞ்சம்" - அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் புகார்

தொழிலதிபர் கெளதம் அதானி மீது அடிக்கடி புகார்கள் வந்தாலும் அவை ஓரிரு நாளில் காணாமல் போய்விடுவது வழக்கமாக இருக்கிறது. எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அடிக்கடி அதானி மீது புகார்கள் கூறினாலும் அவை எடு... மேலும் பார்க்க

எலான் எனும் எந்திரன் 3: 1999-லேயே Elon Musk-க்கின் கனவுக்கு உயிர் கொடுத்த `X.com’

1990களின் மத்தியிலேயே இமெயில் மூலம் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதி அறிமுகமாகிவிட்டது என்றாலும், அத்தனை பிரபலமாகவில்லை. கனடா நாட்டைச் சேர்ந்த இன்டராக் (Interac) என்கிற நிறுவனம் மெயில் மூலம் பணப்ப... மேலும் பார்க்க

திருமண ஊர்வலத்தில் பொழிந்த `பண' மழை... ரூ.20 லட்சத்தை முண்டியடித்துக் கொண்டு அள்ளிச் சென்ற மக்கள்!

ஒவ்வொருவரும் விதவிதமாக திருமணத்தை நடத்துவது வழக்கம். உத்தரப்பிரதேசத்தில் நடந்த திருமணம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது. அதோடு அனைவராலும் பேசப்படும் ஒரு திருமணமாகவும் மாறி இருக்கிறது. அந்த... மேலும் பார்க்க

ரூ.15 கோடி பட்டுவாடா? - வாக்காளர்களுக்கு கொடுக்க ரூ.5 கோடி கொண்டுவந்தாரா பாஜக தலைவர்?

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் எப்படியும் வெற்றி பெறவேண்டும் என்ற நோக்கில் பா.ஜ.க தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக தீவிர பிரசாரம் செய்ததோடு அனைத்து பத்திரிகைகளிலும் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக... மேலும் பார்க்க

ஜெயம் ரவி - ஆர்த்தி விவாகரத்து வழக்கு: நீதிமன்றம் குறிப்பிட்ட `சமரச மையம்’ என்றால் என்ன?

நடிகர் ஜெயம் ரவி அவரின் மனைவி ஆர்த்தி இருவரும் பிரிந்து வாழ்வது அனைவரும் அறிந்ததே. முதலில் ஜெயம் ரவி தாங்கள் பிரிந்து வாழ்வதாக அறிவிக்க, 'அது என்னுடன் பேசி எடுக்கப்பட்ட முடிவல்ல. என்னால் அவரைத் தொடர்ப... மேலும் பார்க்க

சென்னையில் கூடைப்பந்து வீராங்கனை திடீர் மரணம்; சிக்கன் ரைஸ்தான் காரணமா? போலீஸ் தீவிர விசாரணை

கோவையைச் சேர்ந்த எலினா லாரெட் என்ற 15 வயது சிறுமி அங்குள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்புப் படித்து வருகிறார். சமீபத்தில் மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து ப... மேலும் பார்க்க