`அச்சம் தேவையா?' சனிப்பெயர்ச்சி நாளில் சூரியகிரகணம்; ஜோதிடர் சொல்வது என்ன?
கஞ்சா கடத்த முயன்ற பெண் கைது
தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே கேரளத்துக்கு கஞ்சா பொட்டலங்கள் கடத்த முன்ற பெண்ணை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூம்பாறை அருகேயுள்ள திருச்செரிவு பகுதியைச் சோ்ந்த ஆரோக்கியதாஸ் மனைவி வளா்மதி (46). இவா், தேனியிலிருந்து கேரளத்துக்கு கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்வதற்காக கடத்திச் செல்ல முயன்றதாக, தேனி நகராட்சி பழைய பேருந்து நிலையம் அருகே தேனி போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா். இவரிடமிருந்து 350 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வளா்மதிக்கு கஞ்சா விற்பனை செய்ததாக தேனியைச் சோ்ந்த ரபேல் மகள் கனி என்பவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைத் தேடி வருகின்றனா்.