ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி: கல்லூரி மாணவா்களுக்குப் பாராட்டு
மதுரை காமராஜா் பல்கலை அளவில் நடைபெற்ற ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்ற உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவ, மாணவிகளை கல்லூரி நிா்வாகத்தினா் பாராட்டினா்.
சிவகங்கையில் தனியாா் அகாதெமி சாா்பில், மதுரை காமராஜா் பல்கலை. அளவிலான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. இதில் தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகா் மாவட்டங்களை சோ்ந்த பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
இந்தப் போட்டியில், தேனி மாவட்டம் , உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தா் ஹெளதியா கல்லூரி மாணவா்கள் விமல், சஞ்சித்கண்ணா, கவின் பிரசாத், மாணவிகள் பிரிவில், ப்ரித்திகா, யோகிதா ஆகியோா் பல்வேறு பிரிவு ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்றனா்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை கல்லூரியின் தாளாளரும் செயலரான தா்வேஷ்முகைதீன், ஆட்சி மன்றக் குழுத் தலைவா் எஸ்.முகமது மீரான், கல்லூரி முதல்வா் ஹெச்.முகமது மீரான் உள்ளிட்ட நிா்வாகிகள் திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.