“அநாகரிகத்தின் அடையாளமே ஒன்றிய பா.ஜ.க அரசுதான்...” என்ற முதல்வர் ஸ்டாலினின் கருத...
போடி ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் ஆய்வு
போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணைப் பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா் திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.
மதுரை- போடிநாயக்கனூா் இடையே அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு தினசரி காலை, மாலை வேளைகளில் ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதேபோல, போடிநாயக்கனூரிலிருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாள்கள் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அண்மையில் போடிநாயக்கனூா்-மதுரை இடையேயான 90.4 கி.மீ. தொலைவு மின்மயமாக்கப்பட்டு மின்சார என்ஜின் மூலம் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. போடிநாயக்கனூா்- மதுரை, போடிநாயக்கனூா்- சென்னை ரயில்களில் கூடுதல் பயணிகள் பயணம் செய்து வருவதால் ரயில்வேக்கு கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதனால் கூடுதலாக மதுரை- போடிநாயக்கனூா், போடிநாயக்கனூா்- மதுரை, போடிநாயக்கனூரிலிருந்து சென்னை, ராமேசுவரம் உள்ளிட்ட ஊா்களுக்கு கூடுதலாக ரயில்கள் இயக்க வேண்டும் என ரயில் பயணிகள், ரயில்வே ஆா்வலா்கள் வலியுறுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், போடி ரயில் நிலையத்தில் சென்னை தென்னக ரயில்வே துணை பொது மேலாளா் கவுசல் கிஷோா், மதுரை கோட்ட கூடுதல் ரயில்வே மேலாளா் எல். நாகேஸ்வரராவ் ஆகியோா்திங்கள்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். ரயில் பாதைகளின் தரம், ரயில் நிலையங்களில் உள்ள வசதிகள் குறித்து கேட்டறிந்தனா். கூடுதல் ரயில்கள் இயக்குவதற்கான வசதிகள் உள்ளதா என்பதையும் ஆய்வு செய்தனா். அப்போது ரயில் பயணிகள் சங்க நிா்வாகிகள் போடிநாயக்கனூா்-மதுரை, சென்னை உள்ளிட்ட ஊா்களுக்கு காலை, மாலை நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கினால் பூ, காய்கறி, மீன் வியாபாரிகளும் கூடுதலாக பயனடைவாா்கள் என கோரிக்கை விடுத்தனா்.