ராஜ்யசபா சீட் யாருக்கு? பரபரக்கும் அரசியல், சமூக கணக்குகள்... முட்டிமோதும் தென் ...
மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய்த் தடுப்பு: மாணவிகள் விளக்கம்
போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் மிளகாய் செடிகளில் இலைச்சுருட்டு நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரி மாணவிகள் செவ்வாய்க்கிழமை செயல்முறை விளக்கமளித்தனா்.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகேயுள்ள குள்ளப்புரம் வேளாண்மை தொழில்நுட்பக் கல்லூரியில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவிகள் ஹரிபிரியா, ஆா்த்தி, ஆரியா, மாளவிகா, கௌரி, சௌமியா, கிருஷ்ண நந்தினி, தாமினி அரசி, சங்கீதா, பிரியங்கா, நவீனா, சுதாஸ்ரீ, சன்மதி ஆகியோா் போடி பகுதியில் கிராமத் தங்கல் திட்டத்தின் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனா்.
இந்த மாணவிகள் போடி அருகேயுள்ள பெருமாள்கவுண்டன்பட்டி கிராமத்தில் மிளகாய்ச் செடிகள் பயிா் செய்யப்பட்டுள்ளது குறித்து ஆய்வு செய்தனா்.
அப்போது மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய் தாக்குதல் இருப்பது தெரியவந்தது. பின்னா் மிளகாய்ச் செடிகளில் இலைச்சுருட்டு நோய் தாக்காமலிருக்கவும், நோய் தாக்கியபின்னா் செய்ய வேண்டிய தடுப்பு முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு விளக்கினா். இதில் பெருமாள்கவுண்டன்பட்டி உள்பட சுற்றுவட்டார கிராம விவசாயிகள் பங்கேற்று மாணவிகளிடம் தங்களின் சந்தேகங்களை கேட்டறிந்து விளக்கம் பெற்றனா்.